வழிபாடு

கள்ளியங்காடு சிவபுரம் சிவன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது

Published On 2023-01-26 06:59 GMT   |   Update On 2023-01-26 06:59 GMT
  • விழாவானது கடந்த 23-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • இன்று நவசக்தி அர்ச்சனை நடக்கிறது.

நாகர்கோவில் அருகே உள்ள கள்ளியங்காடு சிவபுரத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மீனாட்சி அம்மன் சமேத மகாதேவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனர் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக விழா, சுற்று பிரகார மகாமண்டபம் திறப்பு விழாவும் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

விழாவானது கடந்த 23-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் மங்கள இசை, திருமுறை பாராயணம், சுதர்சன ஹோமம், வாஸ்து சாந்தி, வாஸ்துஹோமம், மகாலெஷ்மி பூஜை, கோபூஜை, கஜபூஜை, பிரம்மச்சாரி பூஜை, மகாபூர்ணாகுதி, புனிதநீர் எடுத்து வருதல், முதல், 2-ம், 3-ம் யாகசாலை பூஜைகள் ஆகியவை நடைபெற்றது.

விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜை, 5-ம் கால யாகசாலை பூஜை, இரவு சாமி வேதிகையில் பஞ்சமுகார்ச்சனை அம்பாள் வேதிகையில் நவசக்தி அர்ச்சனை நடக்கிறது.

விழாவில் நாளை காலை பரிவார மூர்த்திகளுக்கு 6-ம் கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம், 9 மணிக்கு சாமி விமானம், அம்பாள் விமானம், ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள் விமானம் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பிரசன்ன பூஜை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் இந்து தர்ம வித்யபீடம் தர்ம கர்த்தா சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமை தாங்கி பக்தர்களுக்கு ஆசியுரை வழங்குகிறார்.

கும்பாபிஷேக விழாவில் விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, தளவாய்சுந்தரம், நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரிகள் தனுஷ்கோடி ஆதித்தன், பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. விஜயகுமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.வேலாயுதன், நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் செல்வகுமார், பி.எம்.எஸ். பொறுப்பாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். முருகன், ராஜகோபால் ஆகியோர் முன்னிலையில், திருவாசகசபை பொருளாளர் நாராயண நாயர் நன்றி கூறுகிறார்.

தொடர்ந்து கோவிலில் புதிய சுற்று பிரகார மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் டாக்டர் கிஷோர், எலும்பு முறிவு டாக்டர்களான கிருஷ்ணகுமார், மோகன்தாஸ், அபிநயா கன்ஸ்ட்ரக்சன் ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அன்னதானம், பகல் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாமி, அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, இன்னிசை கச்சேரி, இரவு 9 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சிவபுரம் திருவாசக சபை தலைவர் சின்னையன், துணை தலைவர் முருகன், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் நாராயணன் நாயர், துணை செயலாளர்களான சேகர், ரமேஷ், இசக்கிமுத்து, ராஜகோபால் ஆகியோர் தலைமையில் திருவாசக சபை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கவுரவ ஆலோசகர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News