வழிபாடு

மார்த்தாண்டம் அருகே பேரை கிருஷ்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2023-03-26 07:44 GMT   |   Update On 2023-03-26 07:44 GMT
  • இந்த கோவிலின் திருவிழா வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.
  • நாளை காலை 7 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சியை அடுத்த பேரை ஸ்ரீகிருஷ்ணா நகரில் கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் 59-வது வருட திருவிழா நடைபெற்று வருகிறது.

நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசுகிறார்கள். வெள்ளி மலை இந்து சமய வித்யா பீடம் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்திராலய மடத்தின் நிறுவனர் பொன் காமராஜ் சுவாமி, குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசி வழங்கி பேசுகிறார்கள்.

விழாவில் ரவீந்திரநாத குரூப், திக்குறிச்சி ராமச்சந்திரன், பாக்கியராஜ், ஜெயக்குமார், முருகேசன், ஸ்ரீகுமார் ராபின், பி.கே.சிந்துகுமார், சேகர், சந்திரசேகர், செல்லன், மிசா சோமன், கிருஷ்ணகுமார், ஜெயசீலன், பாலஸ், ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். நிகழ்ச்சிக்கு தோமஸ்ராஜ் தலைமை தாங்குகிறார்.

இந்த கோவிலின் திருவிழா வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு யானை மீது சாமி பவனி நடைபெறுகிறது. கோவிலில் இருந்து யானை மீது சாமி பவனி புறப்பட்டு ஆலம்பாறை தி, திக்குறிச்சி சிவன் கோவில், மலையாரம்தோட்டம், வேளச்சேரி, ஞாறான்விளை, பாப்பிரிக்கோணம், ஆலுவிளை காலனி, குழிச்சாணி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைகிறது.

விழா நாட்களில் தினமும் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகங்கள், பூஜை, தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் இளைஞர் கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News