வழிபாடு

பெருங்குளம் மாயக்கூத்தர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா தொடக்கம்

Published On 2023-03-19 09:06 GMT   |   Update On 2023-03-19 09:06 GMT
  • சாமி வீதி புறப்பாடு நடந்தது.
  • தீபாராதனை நடந்தது.

ஏரல் அருகே பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், நவதிருப்பதி கோவில்களில் 6-வது ஸ்தலமாகும். இக்கோவிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தொடங்கி 11 நாட்கள் நடைபெறும்.

அதேபோல் நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம், திருமஞ்சனம், 6 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு சாமி மாயகூத்தர் பெருமாள் தாயாருடன் முன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அதனை தொடர்ந்து கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. காலை 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு பரங்கி நாற்காலியில் சாமி வீதி புறப்பாடு நடந்தது. திருவிழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ குளந்தை வள்ளி தாயார் கைங்கர்யம் சபாவினர் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News