வழிபாடு

முண்டக கண்ணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.

பென்னாத்தூரை முண்டக கண்ணி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22-ந்தேதி நடக்கிறது

Published On 2023-05-10 06:31 GMT   |   Update On 2023-05-10 06:31 GMT
  • 19-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.
  • 20-ந் தேதி நாராயணபுரம் லோகம்மாள் பஜனை நடக்கிறது.

வேலூர் மாவட்டம் பென்னாத்தூரை அடுத்த பாப்பாந்தோப்பு கிராமத்தில் முண்டக கண்ணி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் முதல் நாளான 18-ந் தேதி (வியாழக்கிழமை) பந்தக்கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பால்குடம், பன்னீர் குடம், மஞ்சள் குடம், சந்தன குடம் மற்றும் அம்மனுக்கு சீர்வரிசை ஆகியவை மேளதாளத்துடன் ஊர்வலத்துடன் நடைபெறுகிறது.

20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நாராயணபுரம் லோகம்மாள் பஜனை நடக்கிறது. 21 -ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு ராஜ வாத்தியங்களுடன் சிலம்பாட்டம் நடைபெறும்.

அதைத்தொடர்ந்து 6 மணிக்கு புனித கலச நீர் எடுத்து வருதல், மங்கள இசை, கணபதி ஹோமம், கோ பூஜை, கும்ப அலங்காரம், அங்குரார்ப்பணம், முதல்கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறும். 22 -ந் தேதி (திங்கட்கிழமை) யாகசாலை பூஜை, ஹோமம், தம்பதி பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி யாத்ராலயம், கடம் புறப்பாடு, மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை பிரம்ம ரிஷி நாகச்சூரியன் சாமிகள் தலைமையில் நடைபெறுகிறது. முன்னதாக 19-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

Tags:    

Similar News