வழிபாடு

ஆரல்வாய்மொழி வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 25-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-10-21 08:49 GMT   |   Update On 2022-10-21 08:49 GMT
  • கந்தசஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
  • விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை போன்றவை நடைபெறும்.

ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. விழாவில் முதல்நாள் காலையில் கணபதி ஹோமம், 10 மணிக்கு வவ்வால் குகை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பின்னர் காப்பு கட்டுதல் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, பக்தி பஜனை போன்றவை நடைபெறும்.

30-ந் தேதி காலையில் வவ்வால் குகை பாலமுருகனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை 4 மணிக்கு பாலமுருகன் போர்காலமுருகனாக குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல், தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சூரனை பாலமுருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பின்னர் வாணவேடிக்கை, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பாலமுருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளல் போன்றவை நடக்கிறது.

31-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், பின்னர் மாபெரும் அன்னதானமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை தலைவர் சண்முகபெருமாள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News