வழிபாடு

புத்தன்துறை புனித ஜெபமாலை அன்னை ஆலய தங்கத்தேர் திருவிழா நாளைதொடங்குகிறது

Published On 2023-02-09 06:38 GMT   |   Update On 2023-02-09 06:38 GMT
  • இந்த விழா நாளை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
  • 19-ந்தேதி அன்னையின் அலங்கார தங்கத்தேர்பவனி நடக்கிறது.

புத்தன்துறை புனித ஜெபமாலை அன்னை ஆலய தங்கத்தேர் திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை காலை 8 மணிக்கு கொடி அர்ச்சிப்பு, திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை தொடர்ந்து முட்டம் வட்டார முதன்மைப்பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். பிள்ளைத்தோப்பு பங்குதந்தை ஜெகன் மறையுரையாற்றுகிறார்.

விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

விழாவில் 11-ந்தேதி காலை 8 மணிக்கு ராஜாக்கமங்கலம் துறை இணை பங்குதந்தை அனிஸ் தலைமை தாங்கி நோயாளிகள், முதியோர்களுக்கான சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 12-ந்தேதி காலை 9.30 மணிக்கு நற்கருணை ஆராதனை, மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி, 16 மற்றும் 17-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது.

18-ந்தேதி காலை 8 மணிக்கு அமராவதிவிளை பங்குதந்தை போர்ஜின் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். கார்மல் பள்ளி அருட்பணியாளர் இயேசு நேசம் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு சப்பர பவனி ஆகியவை நடக்கிறது.

விழாவின் இறுதி நாளான 19-ந்தேதி காலை 6 மணிக்கு தேர்த்திருப்பலி நடக்கிறது. இதில் நாகர்கோவில் அசிசி அச்சகம் அருட்பணியாளர் ஜார்ஜ் கிளமென்ட் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். 8.30 மணிக்கு இத்தாலி அருட்பணியாளர் எல்பின்ஸ்டன் தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் அருட்பணியாளர் டன்ஸ்டன் மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு அன்னையின் அலங்கார தங்கத்தேர்பவனி, 11 மணிக்கு அன்பின் விருந்து, மாலை 6.15 மணிக்கு தங்கத் தேர்பவனி நிறைவு, 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வில்சன் தலைமையில் பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் இணைந்து செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News