வழிபாடு
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நாளை திருக்கல்யாணம் நடக்கிறது
- சுப்பிரமணியசாமி ஹோமம் நாளை வரை நடக்கிறது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று சுப்பிரமணியசாமி ஹோமம் தொடங்கியது. நேற்று நடந்த சுப்பிரமணியசாமி ஹோம மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக யாகசாலையில் காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரை சிறப்புப்பூஜை, ஹோமம், லகுபூர்ணாஹுதி, நிவேதனம், ஆரத்தி நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ஹோமம், சஹஸ்ரநார்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஹோமம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. நாளை மாலை 5:30 மணியில் இருந்து இரவு 7:30 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.