வழிபாடு
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நிறைவடைந்தது
- திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நடைபெற்று வந்தது.
- இன்று சண்டிகேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நடைபெற்று வந்தது. 11 நாட்கள் நடைபெறும் இந்த ருத்ர யாகம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதன் ஒரு பகுதியாக காலையில் மூலவர் கபிலேஸ்வர சுவாமிக்கு ருத்ரயாகம் சமாப்தி, மஹாபூர்ணாஹுதி, மகாசாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது.
இன்று (புதன் கிழமை) சண்டிகேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.