வழிபாடு
திருமலை வசந்த மண்டபத்தில் துளசி தாத்ரி சஹிதா தாமோதர பூஜை
- கார்த்திகை மாதத்தையொட்டி விஷ்ணு பூஜை நடந்து வருகிறது.
- இந்த பூஜையின் முக்கியத்துவத்தை பக்தர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி விஷ்ணு பூஜை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் துளசி தாத்ரி சஹிதா தாமோதர பூஜை நடந்தது.
கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். அத்துடன் லட்சுமி நாராயண சிலைகள் மற்றும் துளசி மற்றும் நெல்லி செடிகளுடன் அமரவைக்கப்பட்டனர். அதன் பிறகு துளசி தாத்ரி சஹிதா தாமோதர பூஜையை அர்ச்சகர்கள் நடத்தினர்.
அப்போது தேவஸ்தான வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரிலு கார்த்திகை மாதத்தின்போது துளசி தாத்ரி சஹிதா தாமோதர பூஜையின் முக்கியத்துவத்தைப் பற்றி பக்தர்களுக்கு விளக்கி கூறினார்.
பூஜையில் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர், கோவிந்தராஜ தீட்சிதர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.