வழிபாடு
குழந்தையை பள்ளியில் சேர்க்க நல்லநாள்... நல்ல நேரம்...
- குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விஜயதசமி சிறந்த நாளாகும்.
- அன்று உலக ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு விஜயதசமி தினம் 5.10.2022 புதன்கிழமை வருகிறது. குழந்தைகளை முதன் முதலில் பள்ளியில் சேர்க்கவும், புதிய பாடம் கற்றுக் கொடுக்கத் தொடங்குவதற்கும் விஜயதசமி சிறந்த நாளாகும்.
அன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் சந்திர ஓரையில் சேர்க்கலாம். அல்லது காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குரு ஓரையில் பள்ளியில் சேர்க்கலாம்.
இந்த இரு ஓரைகளில் சேர்த்தால், பாட்டு, நடனம் போன்ற கலைகளில் சிறப்பு ஏற்படும்.
அன்று உலக ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் அவதரித்த தினமும் ஆகும்.