வழிபாடு

தீர்த்த குளம் சிதிலமடைந்து முட்புதர்கள் நிறைந்து காணப்படுவதை படத்தில் காணலாம்.

திருவாப்புடையார் கோவில் தீர்த்த குளம் சீரமைக்கப்படுமா?

Published On 2023-07-20 04:51 GMT   |   Update On 2023-07-20 04:51 GMT
  • குளக்கரை மற்றும் படிக்கட்டுகள் சேதம் அடைந்து உள்ளன.
  • இக்கோவிலில் சுயம்பு மூர்த்தியாக சிவன் காட்சி அளிக்கிறார்.

மதுரை செல்லூரில் பிரசித்தி பெற்ற திருவாப்புடையார் கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் போற்றப்பட்ட கோவிலில் பழமையான கோவில் ஆகும். திருவிழா மற்றும் விசேஷ நாட்களிலும், திருவிழா நாட்களி லும் இங்கு அதிகமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இக்கோவிலில் சுயம்பு மூர்த்தியாக சிவன் காட்சி அளிக்கிறார். கோவிலுக்குள் உள்ள தீர்த்த குளத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். முன்பு அந்த தீர்த்த குளம் நீர் நிரம்பி காணப்பட்டது.

ஆனால் காலப்போக்கில் உரிய பராமரிப்பு இல்லாமல் போனதால் குளத்தில் செடிகொடிகள் வளர்ந்து, முட்புதர்கள் நிறைந்து தற்போது தண்ணீரின்றி குளம் வறண்டு காணப்படுகிறது.

குளக்கரை மற்றும் படிக்கட்டுகள் சேதம் அடைந்து உள்ளன. அமாவாசை நாட்களில் இந்த குளக்கரையில் முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போது இந்த தீர்த்த குளத்தை பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகம் திருவாப்புடையார் கோவில் குளத்தை தூர்வாரி தண்ணீர் நிரப்பிடவும், சிதிலமடைந்த படிக்கட்டுகளை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News