யூரோ கோப்பை: நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
- யூரோ கோப்பை தொடரில் நேற்றிரவு 2 காலிறுதி போட்டிகள் நடைபெற்றன.
- ஜூலை 10 ஆம் தேதி அரையிறுதி போட்டிகள் துவங்குகின்றன.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் 2024 யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்றிரவு நடைபெற்ற காலிறுதி போட்டிகளில் இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து - துருக்கி அணிகள் மோதின.
முதலில் நடைபெற்ற இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் இடையிலான போட்டி பரபரப்பாக முடிந்தது. போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு அடித்திருந்ததால் பெனால்டி கிக் முறை கொண்டுவரப்பட்டது. இதில் இங்கிலாந்து 5-3 என்ற முறையில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெதர்லாந்து - துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் துருக்கியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையடுத்து வருகிற 10 ஆம் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகளும், வருகிற 11 ஆம் தேதி நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.