உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து: காலிறுதியில் ஜப்பானை வீழ்த்தியது சுவீடன்
- பெனால்டில் வாய்ப்பு மூலம் சுவீடனுக்கு ஒரு கோல் கிடைத்தது
- 87-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தாலும், வெற்றிக்கான வழி கிடைக்கவில்லை
உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து தொடரில் 2-வது காலிறுதி ஆட்டம், இந்திய நேரப்படி இன்று மதியம் நடைபெற்றது. இதில் சுவீடன்- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை அமண்டானா இலெஸ்டெட் கோல்அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் சுவீடன் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில், ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் சுவீடனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி பிலிப்பா ஏஞ்சல்டால் கோல் அடித்தார்.
பின்னர் ஜப்பான் வீராங்கனை ஹோனோகா ஹயாஷி 87-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் ஜப்பான் அணியால் கோல் அடிக்க முடியாததால் சுவீடன் 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜப்பான் அணிக்கு 4 கார்னர் வாய்ப்பும், சுவீடன் அணிக்கு 3 கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. சுவீடன் 6 முறையும், ஜப்பான் 3 முறையும் இலக்கை நோக்கி அடித்தனர்.