கால்பந்து போட்டி: வெற்றியுடன் கணக்கை தொடங்கிய பிரான்ஸ்
- பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.
- அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின.
பாரீஸ்:
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. ஆனால் கால்பந்து, ரக்பிசெவன்ஸ் போட்டிகள் நேற்று தொடங்கின.
கால்பந்து போட்டியில்'ஏ' பிரிவில் நடந்த ஆட்டம் ஒனறில் பிரான்ஸ்-அமெரிக்கா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் சீனியர் அணியை தோற் கடித்தது.
'டி' பிரிவில் ஜப்பான் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. இஸ்ரேல்-மாலி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
'பி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டி னா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டம் ஈராக் 2-1 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.
ரக்பி செவன்ஸ் போட்டி யில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிஜி, அயர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து அணிகள் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றன. வில் வித்தை, ஹேண்ட்பால் போட்டிகள் இன்று தொடங்கியது.
வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் தீபக், தருண்தீப்ராய், பிரவீன் ஜாதவ் மற்றும் வீராங்கனை பஜன்கவுர், தீபிகா குமாரி, அங்கீதா பகத் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.