கால்பந்து
எதிர் அணி வீரரை கடித்த கால்பந்து வீரருக்கு ரூ.16 லட்சம் அபராதம்
- எதிர் அணி வீரரை கடித்ததற்காக கால்பந்து வீரர் மிலுடின் ஒஸ்மாஜிக்கு 8 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
- போட்டியின் போது இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பிரெஸ்டன்-பிளாக்பர்ன் அணிகள் இடையே நடந்த கால்பந்து போட்டியின் போது எதிர் அணி வீரரை கடித்ததற்காக கால்பந்து வீரர் மிலுடின் ஒஸ்மாஜிக்கு 8 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ.16 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரெஸ்டன் வீரரான மிலுடின் ஒஸ்மாஜிக் கடந்த 22-ந்தேதி நடந்த ஆட்டத்தில் பிளாக்பர்ன் பின்கள வீரர் ஓவன் பெக்கை கடித்ததாக தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளார். அவர் கடிக்கப்பட்டதாக நடுவர் மாட்டோனோ ஹூவிடம் பெக் கூறிய போதிலும், இந்தச் சம்பவத்திற்காக மிலுடின் ஒஸ்மாஜிக் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை.
போட்டியின் போது இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.