பலோன் டி'ஓர் விருது: ரொனால்டோ ரசிகர்கள் அதிர்ச்சி
- 5 முறை இந்த விருதை ரொனால்டோ பெற்றுள்ளார்.
- ரொனால்டோ முதல் முறையாக 2008-ம் ஆண்டு இந்த விருதை பெற்றார்.
வருடம் வருடம் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பலோன் டி ஓர் விருதை பிபா வழங்கி வருகிறது. 1956 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை வாங்குவதில் 2007-ம் ஆண்டு முதல் மெஸ்சி மற்றும் ரொனால்டோவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களில் 60 (30 ஆண் மற்றும் பெண்) பேர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்ல உதவுவதில் முக்கிய பங்கு வகித்த லியோனல் மெஸ்ஸி இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மேலும் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இந்த பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவராக உள்ளனர்.
இதில் போர்ச்சுகல் ஜாம்பவான் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர் பரிந்துரை பட்டியலில் இடம் பெறவில்லை. 5 முறை இந்த விருதை பெற்றுள்ள அவர் பெயர் இடம் பெறாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரொனால்டோ முதல் முறையாக 2008-ம் ஆண்டு இந்த விருதை பெற்றார். அதனை தொடர்ந்து 2013, 2014, 2016, 2017 என கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.