மான்செஸ்டர் சிட்டி வீரர்களை வரவேற்ற 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள்
- மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது.
- 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர்.
இஸ்தான்புல்:
கிளப் அணிக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து கிளப்), இன்டர் மிலன் (இத்தாலி) அணிகள் துருக்கியின் இஸ்லான்புல் நகரில் மோதின. முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் 68-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் ரோட்ரி கோல் போட்டார். அதுவே வெற்றிக்கும் வித்திட்டது.
முடிவில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த சீசனில் பிரிமீயர் லீக், எப்.ஏ. கோப்பையை சுவைத்த மான்செஸ்டர் சிட்டிக்கு இது 3-வது மகுடமாக அமைந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.