கால்பந்து

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: ஜாம்பியா- ஜப்பான் அணிகள் வெற்றி

Published On 2023-07-31 12:19 GMT   |   Update On 2023-07-31 12:19 GMT
  • ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
  • ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது.

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

இன்று சி பிரிவில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஜப்பான் வீராங்கனையான ஹினாட்டா இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். முதல் கோலை 12-வது நிமிடத்திலும், 2-வது கோலை 40-வது நிமிடத்திலும் அடித்தார். மேலும் 29-வது நிமிடத்தில் ரிகோவும் 82-வது நிமிடத்தில் மினா டனாகாவும் கோல் அடித்தனர்.

இறுதியில் ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய ஸ்பெயின் அணி ஒரு கோலை கூட பதிவு செய்யாமல் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து சி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஜாம்பியா நாடுகள் மோதின. இதில் ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பையில் ஜாம்பியா தனது முதல் வெற்றியைப் பெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறி விட்டன.

Tags:    

Similar News