உடற்பயிற்சி

உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு

Published On 2024-09-20 09:33 GMT   |   Update On 2024-09-20 09:33 GMT
  • கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது.
  • சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதையும் தடுக்கும்.

உடல் எடை அதிகரிப்பு இந்தியாவை அச்சுறுத்தும் பிரச்சனையாக வளர்ந்துகொண்டிருக்கிறது. கொஞ்சமாகத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும் உடல் எடை அதிகரித்துவிடுகிறதே என்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உடல் எடை அதிகரிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கே கேடாகிறது. சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், ஜீரண கோளாறுகள், ரத்தத்தில் அதிக கொழுப்பு, கல்லீரலில் கொழுப்பு சேர்வது போன்ற பல்வேறு நோய்களுக்கு அது மூலகாரணம்."


உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறவர்களின் கவலைக்கு மருந்தாக (உணவாக) அமைவது கொள்ளு. இதில் நார்சத்து அதிகம். அது நீரில் கரையும் நார்சத்தாக இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்க உதவுகிறது.

கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. கொள்ளுவில் இருக்கும் 'பாலிபீனால்' என்ற தாவர சத்து உடல் எடையை குறைக்க உதவும். சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும். சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதையும் தடுக்கும்.

20 கிராம் கொள்ளை இரவு நீரில் ஊறவைத்து, மறுநாள் அதை கொதிக்கவைத்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் கரைந்து சிறு நீர் மூலம் வெளியாகிவிடும்.

நுரையீரலில் சிக்கியுள்ள கபத்தை வெளியேற்றும் தன்மையும் கொள்ளுவிற்கு உண்டு. ஆஸ்துமா, சளி, இருமல், சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் கொள்ளு சேர்ந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் உடல் குளிர்ச்சியடையும் பாதிப்பு கொண்டவர்கள், கழுத்தை சுற்றி வீக்கம் கொண்டவர்கள், சளி தொந்தரவால் அடிக்கடி அவதிப்படுகிறவர்கள் கொள்ளை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது.


உடலில் கப தன்மை அதிகரிக்கும்போதும், வாத தன்மை அதிகரிக்கும்போதும் வயிற்று உப்புசம், ஜீரண கோளாறு, இடுப்பு தொடை பகுதிகளில் வலி, மூட்டுவலி, வீக்கம் போன்றவை ஏற் படும்.

அப்போது உடலுக்கு உஷ்ணம் தரும் உணவு அவசியம். கொள்ளு உஷ்ணத்தை தரும். மாதவிடாய் கால நெருக்கடிகளையும் குறைக்கும். தொப்பைபோடும் ஆண்களும் கொள்ளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

Tags:    

Similar News