ஏ.டி.எச்.டி. பாதிப்புக்கு பரம்பரை மரபணுக்கள் காரணமா?
- ஏ.டி.எச்.டி. பாதிப்பு பெரும்பாலும் குழந்தை பருவத்தில் அறிகுறிகள் தோன்றினாலும், இளமைப்பருவம் மற்றும் முதுமையிலும் கூட தொடரலாம்.
- இந்தியாவில், ஆரம்பப்பள்ளி மாணவர்களிடையே ஏ.டி.எச்.டி. பாதிப்பு 11.32 சதவீதம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
கவன பற்றாக்குறை மற்றும் அதிக செயல்பாட்டு கோளாறை ஏ.டி.எச்.டி. பாதிப்பு என கூறுகிறார்கள். இது சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மன கவனத்தை ஒருங்கிணைப்பதிலும், மனக்கிளர்ச்சியான நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதிலும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
ஏ.டி.எச்.டி. பாதிப்பு ஏற்படும்போது அமைதியின்மை, திடீர் பதற்றம், நேரடியாக பேசும்போது கேட்க இயலாமை, மறதி, எளிதில் திசை திருப்புதல் அல்லது அதிவேகமாக இருப்பது ஆகிய அறிகுறிகள் காணப்படும்.
ஏ.டி.எச்.டி. பாதிப்பு பெரும்பாலும் குழந்தை பருவத்தில் அறிகுறிகள் தோன்றினாலும், இளமைப்பருவம் மற்றும் முதுமையிலும் கூட தொடரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் 2.5 சதவீதம் பெரியவர்களும், 5 சதவீதம் குழந்தைகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
இந்த பாதிப்புக்கு சிகரெட் புகைத்தல், மது அருந்துதல் அல்லது கர்ப்ப காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வரலாம் என்று கருதப்பட்டது.
மேலும், உடலில் அதிக அளவில் ஈயம் கலப்பது, குறைந்த எடை, மூளையில் காயம் போன்ற பிரச்சனைகளாலும் ஏற்படும் என்று தெரிகிறது. ஆனால், இவை அனைத்தையும் விட ஏ.டி.எச்.டி. பாதிப்புக்கு பரம்பரை மரபணுக்கள்தான் காரணம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏ.டி.எச்.டி. பாதிப்பு உள்ளவர்களில் காணப்படும் மரபணுக்களின் மாறுபட்ட வடிவம், மற்ற மனநல பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படுவதை போலவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், ஆரம்பப்பள்ளி மாணவர்களிடையே ஏ.டி.எச்.டி. பாதிப்பு 11.32 சதவீதம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் காரணமாக உருவாகும் இந்த பாதிப்புக்கு தொடர் மருத்துவம் மூலம் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் நிரந்தரமாக குணமாக்கும் வகையில் ஆய்வுகள் தொடர்கின்றன.