பாரம்பரிய நெல் ரகங்களில் இவ்வளவு பயன் இருக்கா?
- அடிப்படையில் அறிய வேண்டியவற்றை அறியாமல் உழன்று கொண்டிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் இன்று உள்ளனர்.
- யற்கை தந்துகொண்டிருக்கும் கற்பகத்தரு என்ன? என்பதை தெரியாமலே பலர் வாழ்ந்தும் மடிந்தும் போய் விடுகின்றனர்.
இன்றைக்கும் பாரம்பரிய நெல்ரகங்களை மட்டுமே பயிரிடும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட பாரம்பரிய அரிசிகளைத் தவிர மற்றவற்றை விரலாலும் தீண்டமறுக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களும் உள்ளன.
பாரம்பரிய நெல் என்பவை இந்த தமிழ்மண்நமக்குத் தந்த வரம்! அதற்கு தேவையில்லை ரசாயணஉரம்! அவை அத்தனையும் உன்னதத்தரம்! அரிசி என்றால் பச்சரிசி அல்லது புழுங்கலரிசி என்பதை க் கடந்து, வேறொன்றும் தெரியாத - தங்களை மெத்த படித்த அறிவாளிகளாக கருதிக்கொண்டிருக்கும் - ஆனால் அடிப்படையில் அறிய வேண்டியவற்றை அறியாமல் உழன்று கொண்டிருக்கும் - கோடிக்கணக்கானவர்கள் இன்று உள்ளனர்.
இந்த தேசத்தின் உண்மையான சொத்துத் என்ன? சுகம் என்ன? இயற்கை தந்துகொண்டிருக்கும் கற்பகத்தரு என்ன? என்பதை தெரியாமலே பலர் வாழ்ந்தும் மடிந்தும் போய் விடுகின்றனர்!
50 வருஷத்திற்கு முன்பு வரை கூட நாம் பாரம்பரிய அரிசி ரகங்களை மட்டுமே உண்டு வாழ்ந்தோம் என்பது பொய்யாய் பழங்கதையாய் போனதுவோ....?
மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டிட் ... பாடலில்,
"ஆத்தூத்ரு கிச்சிலிச்சம்பா பாத்துத் வாங்கி விதை விதைச்சுச் ..." என்ற வரி ஞாபகம் இருக்கிறதா?
தைப்பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம், தங்கச்சம்பா நெல்விளையும் தங்கமே தங்கம் பாடல் ஞாபகம் இருக்கிறதா?
இந்தத் தலைமுறையில் எத்தனைபேர் கிச்ச லிச்சம்பா, தங்கச்சம்பா சோறு சாப்பிடும் வாய்ப்பு பெற்றுள்ளனர்?
அடடா, அந்தச்சுச்வையை எழுத்தில் சொல்லக் கை கூடுமா?
அதை யெல்லாம் சாப்பிட்டுட் வந்தால் நமக்கு நோய்நொடி தான் வருமா? எப்போது நம் பாரம்பரிய நெல்ரகங்கள் முழுமையான பயன்பாட்டுட் க்கு வருகிறதோ?
அன்றைக்கு தான் தமிழர்களின் ஆரோக்கியம் சிறக்கும்!
அப்போது இங்கே மருத்துவர்களுக்கும், மருத்துவ மனைகளுக்குமான வேலை ரொம்ப குறைஞ்சி போயிடும்.
நமது பாரம்பரிய நெல்ரகங்கள் பெரும்பாலானவை நீண்டநாள் பயிர்களாகும். அதில் தான் நீடித்த ஆயுளுக்கான வாய்ப்பையும் நாம் பெறலாம்!
மாப்பிள்ளை சம்பா, தங்கச்சம்பா, சம்பாமோசனம், சண்டிகார், கை வரச்சம்பா போன்றவை 160 முதல் 170 நாட்கள் பயிர்களாகும்.
நெல்ரகங்கள் - நாட்கள்
கருடன் சம்பா - (170 -180)
குடவாழை - (140 -145)
நீலச்சம்பா - (175 - 180)
கிச்சிலிச்சம்பா - (140 - 145)
கருப்புகவுணி - (140 - 150)
காட்டுயாணம் - (180 - 185)
ஓட்டையான் - 190 நாட்கள்
கரைநெல் - 270 நாட்கட் ள் மூங்கிலரிசி - 12,24,30,40 என வருடக்கணக்காகும் பயிர்களாகும்!
பாரம்பரிய அரிசிகள் பயன்கள்
பிசினி அரிசி, வாலான் அரிசி - பருவ வயது பெண்ணுக்கு உகந்தது
பூங்கார், வாலான், சிகப்புக்கவுணி - கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது
கிச்சிலிச்சம்பா, நீலச்சம்பா, குழிவெடிச்சான் - தாய்பால் சுரப்புக்கு உகந்தது
மாப்பிள்ளை சம்பா - நரம்புகளை பலப்படுத்த, உயிரணுக்களை அதிகரிக்க, நீரழிவைதடுக்க
காட்டுயாணம் - இதயபாதுகாப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, மூட்டு வலிதீர்வு , நீரழிவு தடுப்பு
நீலசம்பா - ரத்தசோகை விலக
குள்ளக்கார், பெருங்கார், கருத்தகார் - மலச்சிக்கல்தீர, மூலம்விலக
வாடான் சம்பா - அமைதியான தூக்கத்திற்கு
கோரைச்சம்பா - பித்தசூடுவிலக, உடல்குளிரவிக்க
கட்டச்சம்பா - கடும் உழைப்பாளிகளுக்கு
மூங்கிலரிசி, மிளகி, கல்லுடைசம்பா, கவுணி ; எலும்பு பலப்பட
கருங்குறுவை - இழந்த சக்தியை மீட்டெடுக்க, கொடிய நோய்களிலிருந்து மீள, புற்றுநோய், தோல்நோய் சீராக
குடவாழை - குடலை வாழவைக்கும்
இலுப்பை பூ சம்பா - பக்கவாதம் விலக, கால்வலி சரியாக தூயமல்லி - உடலின் உள் உறுப்புகளை வலுப்படுத்தும்
சேலம் சன்னா - தசை , நரம்பு, எலும்பு பலப்பட...
சூரக்குறுவை - உடலிலுள்ள கெட்ட கொழப்பை வெளியேற்ற...
தங்கச்சச் ம்பா - இதயம் வலுப்படும், கால்சியம் அதிகமுள்ளது
நீலச்சம்பா - ரத்தசோகை விலகும்
இனிவரும் காலங்களில் பாரம்பரிய அரிசி வகைகளை நமது சந்ததியினருக்கு கொடுத்து பிற்காலத்தில் வரவிருக்கும் நோய்களில் இருந்து விடை பெறுவோம்.