பொது மருத்துவம்

மன அழுத்தத்திற்கும், உடல் வலிக்கும் தொடர்பு இருப்பது உங்களுக்கு தெரியுமா?

Published On 2024-11-19 09:18 GMT   |   Update On 2024-11-19 09:18 GMT
  • மன அழுத்தம் தலை வலியினை ஏற்படுத்தலாம்.
  • சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகின்றதாம்.

அடிக்கடி உடம்பு வலி அல்லது உடம்பில் ஏதோ ஒரு இடத்தில் வலி என்று நாம் கூறுகின்றோம். இந்த வலிகளுக்கு காரணம் பல இருக்கின்றன. இதற்கு உடல், மனம் உளைச்சல், வேதனை உணர்ச்சிகள் ஆகியவை காரணமாக இருக்கலாம்.


மன அழுத்தம் தலைவலியினை ஏற்படுத்தலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் தினமும் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

தோள் பட்டை வலி

மிக அதிக கவலை உணர்ச்சிகளை சுமப்பது, அதிக பொறுப்பு சுமை இவை தோள்பட்டை வலியினை ஏற்படுத்தலாம்.


கழுத்து வலி

பிறரை மன்னிக்க முடியாத கோப உணர்ச்சி, தன்னையே மன்னித்துக் கொள்ள முடியாத கோப உணர்ச்சி, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளில் கவனம் செலுத்த முடியாமை போன்றவை கழுத்து வலிக்கு காரணமாக இருக்கும் என்கின்றனர்.

மேல் முதுகு வலி

யாரும் தன் மீது அன்பு செலுத்தவில்லை என்ற உணர்வு, யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை என்ற உணர்வு மேல் முதுகு வலியினை ஏற்படுத்துமாம்.

கீழ் முதுகு வலி

பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர்களுக்கு கீழ் முதுகு வலி ஏற்படுகின்றதாம்.

முழங்கை வலி

சில மாறுதல்களை ஏற்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு முழங்கை வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்கின்றனர்.

கை வலி- தனிமை இதற்கு ஒரு காரணம்.


இடுப்பு வலி

வாழ்க்கையின் பாதையில் சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகின்றதாம்.

முட்டி வலி

எதனையும் தானே செய்து கொள்ள வேண்டும். யாரையும் எதற்கும் எதிர்பாராத வாழ்க்கை வேண்டும் என்ற ஒரு அடமும் இதற்கு ஒரு காரணமாம். எளிமை, பிறருக்கு உதவுதல் போன்றவை நன்மை பயக்கும் என்கின்றனர்.

தசை வலி

மனக் கசப்புகளை மறக்காது மனதில் வைத்திருப்பவர்களுக்கு தசை வலி ஏற்படலாம். மனதில் நன்றியுணர்வு, ஆக்கப் பூர்வமான எண்ணங்கள் இவை நலன் அளிக்கும் என்கின்றனர்.

பாத வலி

அதிக மனச்சோர்வு, அழிவுப் பூர்வமான எண்ணங்கள் உடையவர்களுக்கு ஏற்படுகின்றதாம். ஆக்கப் பூர்வமான எண்ணங்கள் உடையவர்களுடன் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது.


கணுக்கால் வலி

தன் மீதே ஒருவர் மிகக் கடுமையாக இருப்பவர்களுக்கு கணுக்கால் வலி ஏற்படலாம். ஒருவர் தன்னை நேசிக்கவும் பழக வேண்டும்.

சரி, இதையெல்லாம் யார் சொன்னார்கள்? பொதுவில் மன நலமின்மை உடல் நலத்தினை பாதிக்கும் என்பது மருத்துவ ரீதியான கூற்றுதான்.

அதற்காக தானே செயல்படாமல் எந்த ஒரு அறிகுறியினையும் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை, மருந்து, சிகிச்சை இவற்றினை முறையாய் கடை பிடிக்க வேண்டும் என்பதே என்றென்றும் சரியான ஒன்று.

மனநல ஆலோசகர்களும், யோகா பயிற்சியாளர்களும் நம் உடல், மனம், ஆன்மா ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதனை அறிவுறுத்துவர்.

Tags:    

Similar News