பொது மருத்துவம்

அறிந்து கொள்வோமா... தேனடை மருத்துவ குணம்

Published On 2024-08-23 07:10 GMT   |   Update On 2024-08-23 07:10 GMT
  • தேனீக்கள் சேகரித்த மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் ராயல் ஜெல்லி என்ற மெழுகு ஆகியவை அடங்கும்.
  • வெளிநாடுகளில் தேனடையுடன் தேன், காலை உணவாக உணவகங்கள் பரிமாறப்படுகிறது.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவும் தருவேன் என்று பாடினார், அவ்வையார்.

தற்போது, தேனைவிட தேனடை மதிப்பு மிக்கதாக உண்ணப்படுகிறது தேனடை என்பது ஒரு தேன்கூடு. தேனீயின் வீடு.

இந்த வீட்டில்தான் தேனீக்கள், மகரந்தத்தையும், தேனையும் சேமித்து வைக்கும். இது மெழுகு போன்று அமைந்திருக்கும்.

பொதுவாக, வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் தேன், பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால், தேனடையில் நேரடியாக கிடைக்கும் தேன் இயற்கையானது.

தேனீக்கள் சேகரித்த மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் ராயல் ஜெல்லி என்ற மெழுகு ஆகியவை அடங்கும். தனியாக பிழியப்பட்ட தேனில் இவை காணப்படாது.

இதனால், தனி தேனை விட மகரந்தம், ராயல் ஜெல்லி மெழுகு அடங்கிய தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் என்று நம்பப்படுகிறது. வெளிநாடுகளில் தேனடையுடன் தேன், காலை உணவாக உணவகங்கள் பரிமாறப்படுகிறது.

தேன் கூட்டில் செறிந்து கிடக்கும் தேனில் புரதங்கள், தாதுக்கள், நீர், மகரந்தம், பிரக்டோஸ், குளுக்கோஸ், கரிம அமிலங்கள், புரதங்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவை தாராளமாக உள்ளன.

இதனை உண்ணும்போது மனித உடல் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை வலுவாக எதிர்த்து போராடும் வலிமையை அதிகரிக்கிறது. ஆதிகால மருத்துவத்தில் தும்மல், சளி மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு தேனடையை மென்று சாப்பிட பரிந்துரைப்பது வழக்கம். இதனால், மேற்கண்ட உடல்நலக்குறைவு ஒரு சில நாட்களில் மறைந்து விடும் என்று நம்பப்படுகிறது.

Tags:    

Similar News