பொது மருத்துவம்

இரவில் பல் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள்

Published On 2023-11-10 06:39 GMT   |   Update On 2023-11-10 06:39 GMT
  • பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உண்டாக்கும்.
  • ஈறு சம்பந்தமான நோய் அபாயமும் குறையும்.

காலையில் மட்டுமல்ல, இரவிலும் பல் துலக்குவது கட்டாயம். அது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உண்டாக்கும். அவை இதோ....

* தினமும் காலையிலும், இரவிலும் பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஈறு சம்பந்தமான நோய் அபாயமும் குறையும். ஏனெனில் இரவில் பற்களைத் துலக்கும் போது, பல்லில் உள்ள மஞ்சள் நிறம் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம்.

* இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமானால், இரவிலும் பற்களைத் துலக்குங்கள்.

* இரவில் பற்களைத் துலக்காமல் இருந்தால், காலையில் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும். உண்ட உணவுகள் பற்களின் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியாக்கள் பெருகிவிடும். எனவே இரவில் தவறாமல் பற்களைத் துலக்குங்கள்.

* படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாய் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

* வாய் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டது. ஒருவரது வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பிளேக் உருவாக்கத்திற்கு காரணமான பாக்டீரியாக்கள் ரத்த நாளங்களில் நுழைந்து, ரத்த நாளங்களை பாதிக்கும். இதன் முடிவாக இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும்.

Tags:    

Similar News