பொது மருத்துவம்
null

உங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வருகிறதா?

Published On 2024-08-14 05:36 GMT   |   Update On 2024-08-15 05:41 GMT
  • சாப்பிடும்போது மெதுவாக சாப்பிட வேண்டும்.
  • ஆலிவ் எண்ணெய், நட்ஸ், விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் செரிமானத்தை மேம்படுத்தும்.

ஏப்பம் என்பது நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும். இது சாதாரணமானது என்றாலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது பிரச்சனையாக மாறிவிடும்

சாப்பிடும்போது மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிடும்போது அதிக காற்று உள்ளே சென்று விடுகிறது. இது ஏப்பத்தை உண்டாக்கும்.

அடிக்கடி கொழுப்பு நிறந்த உணவுகளான எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதும் ஏப்பத்தை ஏற்படுத்துகிறது.

சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால், உடலில் உணவுக்கான இடத்தை காற்று நிரப்பிவிடுகிறது. இதனாலும் ஏப்பம் அடிக்கடி வரும்.

உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் செரிமானம் எளிதாகும். இதனால் ஏப்பம் வருவது குறையும்.

ஆலிவ் எண்ணெய், நட்ஸ், விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் செரிமானத்தை மேம்படுத்தும்.

அதிகப்படியான ஏப்பம் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தால், வயிற்றில் புண் இருக்கிறது என்று அர்த்தம். இதனால் கடுமையான வயிற்று வலியும் உண்டாகும்.

நீண்ட நாட்களாக மன அழுத்தம், தூக்கமின்மை, சோகமாகவே இருப்பது, மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனைகளால் ஏப்பம் அடிக்கடி வரும். எனவே மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி ஏப்பம் வருவதுடன், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற மற்ற அறிகுறிகளும், ஏப்பம் வருவது அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்தினால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News