மருத்துவ குணங்கள் நிறைந்த `கலாடியம்'
- கொரோனா தடுப்பு மருந்தாக ஓமியோபதி ஆர்சனிக் ஆல்பம் பயன்படுத்தப்பட்டது.
- ஆண்மைக்குறைவு பாதிப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
மக்களுக்கு ஓமியோபதி மருத்துவம் சிறப்பானதாக இருக்கும் என்றார் மகாத்மா காந்தி. விலை குறைவு, உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் நிவாரணம் அளிப்பதால் உலக அளவில் மக்கள் பயன்படுத்தும் 2-வது மருத்துவமுறையாக ஓமியோபதி மருத்துவமுறை இருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்தாக ஓமியோபதி ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவத்தில் பெருமளவு தாவரங்களும், ஒரு சில உலோகங்களும் அணு வடிவமாக்கப்பட்டு மருந்தாக பயன்படுகின்றன.
அந்த வகையில் நாம் வீடுகளில் வளர்க்கும் அழகு தாவரமான கலாடியம் என்ற செடியில் இருந்து மருந்து தயாரிக்கப்பட்டு அந்த செடியின் பெயரிலே வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த கலாடியம் மருந்து, தீவிர புகையிலை பழக்கத்தால் ஆண்மைக்குறைவு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பசியின்மை, வாயு கோளாறு, கொசு கடித்தால் கூட தோலில் ஏற்படும் கடுமையான அரிப்பு, சிவப்பு கொப்பளங்கள், மூக்கு, காது மற்றும் தலையில் ஏற்படும் கொப்பளங்கள், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளையும் நீக்க ஓமியோபதி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
கலாடியம் தாய் திரவத்தை சொட்டு மருந்தாக தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் புகைப்பழக்கம், புகையிலை பழக்கங்களில் இருந்து மீளலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக, ஓமியோபதி மருந்துகளை தகுதி வாய்ந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தினால் பெரிய மருத்துவ செலவு இல்லாமல் பல நோய்களில் இருந்து வருமுன் தற்காத்து கொள்ளலாம் என நம்பப்படுகிறது.