பல்வேறு நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா...?
- வளர்ச்சிதை மாற்றுப் பொருட்கள் சிறுநீரகம் மூலம் தான் வெளியேற்றப்படுகிறது.
- பக்க விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான்.
உடம்பில் மருந்துகளின் பக்க விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படும் உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகம் திகழ்கிறது. ஏனெனில், பெரும்பாலான மருந்துகள் மற்றும் அதன் வளர்ச்சிதை மாற்றுப் பொருட்கள் சிறுநீரகம் மூலமாக தான் வெளியேற்றப்படுகிறது.
அப்போது அதுசிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். மருத்துவமனையில் சேர்க்கப் படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளில் 20 சதவீதத்தினருக்கு மருந்துகளின் பக்க விளைவே காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 60 வயதை கடந்தவர்கள், ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் செப்சிஸ் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மருந்துகளின் பக்கவிளைவுகளினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாக மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அந்த மருந்தை உட்கொள்வதை நிறுத்திய பின்னர் மீண்டும் சிறுநீரக செயல்பாடு பழைய நிலைக்கு திரும்பும். ஆகையால் நீங்கள் எந்த ஒரு நோய்க்கும் மருந்தை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசித்து அவர் பரிந்துரைக்கும் மருந்து மற்றும் அளவுகளை பின்பற்றினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது.