குடைமிளகாய்: அறிந்திராத ஆரோக்கிய பலன்கள்
- குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது
- குடைமிளகாய் சாறு எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது
குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளது. குடைமிளகாய் காரமற்றது என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடைமிளகாய் வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது.
கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும். பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் இருக்கிறது. குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது. இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும். குடைமிளகாயில் உள்ள கேயீன் என்னும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.
குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடைமிளகாய் சாறு எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது
குடைமிளகாயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை புற்று நோய் வராமல் தடுக்கிறது. தினமும் குடைமிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீர்ப்பை, கணையம், கருப்பை வாய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கலாம்.
வைட்டமின் C மற்றும் வைட்டமின் E அதிகம் உள்ள குடைமிளகாய் நம் தோலுக்கு தேவையான சத்துகளை தந்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தோலில் ஏற்படும் சுருக்கத்தை போக்கி வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. செல்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தி தோலுக்கு உறுதியளிக்கிறது.
குடைமிளகாய் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது வாய்வு தொல்லையை போக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.
100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்துக்கள் :
புரோட்டின் – 0.99 கிராம். சக்தி – 31 கலோரி. சோடியம் – 4 மி.கிராம். கொலஸ்ட்ரால் – இல்லை. கொழுப்பு – 0.3 மி.கிராம். தாதுச் சத்து – 6.02 மி.கிராம். பொட்டாசியம் – 211 மி.கிராம். மெக்னீசியம் – 12 மி.கிராம். வைட்டமின் சி – 127.7 மி.கிராம். கால்சியம் – 7 மி.கிராம். இரும்பு – 0.43 மி.கிராம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health