கண்ணுக்கு எளிதாக தெரியும் நிறங்கள்
- 3 வகையான நிற உணர் நிறமிகள் உள்ளன.
- வெள்ளை நிறமும் இரவில் குறைந்த ஒளியில் கூட துல்லியமாக புலப்படும்.
மனித கண்களுக்கு பகலில் நிறங்கள் புலப்படுவது போல் இரவில் அவ்வளவு தெளிவாக தெரிவதில்லை. மனித கண்களின் அமைப்பு அப்படித்தான் உள்ளது.
பொதுவாக, நிறங்கள் அலைகளின் ஊடாக பயணிக்கின்றன. நிறத்தை பொறுத்து அந்த அலைகள் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட அலைநீளம் கொண்டவையாக இருக்கின்றன. இதில், ஓரளவு அதிக அலைநீளம் கொண்ட நிறங்களை மனித கண்களால் குறைந்த ஒளி வெளிச்சத்தில் பார்க்க முடியும்.
அந்த வகையில், பச்சை நிறம் மிகத்தொலைவில் இருந்து கூட பார்க்கும் வகையில் அலைநீளம் கொண்டதாக உள்ளது.
பொதுவாக, நமது கண்களில் போட்டோரிசப்டர் செல்கள் என்று கூறப்படும் 3 வகையான நிற உணர் நிறமிகள் உள்ளன. இந்த நிறமிகள்தான் நிறங்களின் அலைநீளத்தை உணர்ந்து மூளைக்கு அதனை தெரிவிக்கின்றன.
பகல் நேரத்தில் இந்த நிற உணர் நிறமிகள் பச்சை, மஞ்சள் மற்றும் நீல நிறங்களின் அலை நீளங்களை எளிதில் உணர்ந்து கொள்கின்றன. இதன் காரணமாகத்தான் போக்குவரத்து சிக்னல் விளக்குகளில் வாகனங்கள் கடந்து செல்ல அனுமதியை குறிக்கும் வகையில் பச்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கு மாறாக போக்குவரத்து சிக்னல் விளக்குகளில் சிவப்பு நிறம் வாகனங்கள் நிறுத்த கட்டளையை அறிவிக்க பொருத்தப்பட்டுள்ளன. சிவப்பு வண்ண அலைநீளம் மிகக்குறைவு என்றாலும் வாகனங்கள் குறைந்த தொலைவில் கூட சிவப்பு விளக்கு எரிந்தால் உடனே அடையாளம் கண்டு வாகனத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக சிவப்பு பயன்படுத்தப்படுகின்றன.
குறைந்த வெளிச்சத்தில் கூட தெளிவாக கண்களின் நிற உணர் நிறமிகளால் கண்டுகொள்ளக்கூடிய நிறமாக இருப்பது மஞ்சள் நிறம். பெரும்பாலும் இரவு நேரங்களில் பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள், அவசர கால வாகனங்கள் மஞ்சள் நிறம் கொண்டவையாக இருப்பது இரவிலும் அவை தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். இதே போல வெள்ளை நிறமும் இரவில் குறைந்த ஒளியில் கூட துல்லியமாக புலப்படும்.