null
சர்க்கரை நோயாளிகள் பாத பராமரிப்புக்கான டிப்ஸ்
- கால்விரல்களுக்கு இடையில், மென்மையான துண்டு அல்லது சிறிய துணிகளை பயன்படுத்தி பாதங்களை நன்கு உலர வைக்க வேண்டும்.
- நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலணியை பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
நீரிழிவு நோயினால் பாதங்கள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். இது வெப்பம் மற்றும் குளிர், உணர்வின்மை மற்றும் எரியும் உணர்வுகளை ஏற்படுத்தும்.
நரம்பு பாதிப்பு காரணமாக, பாதங்களில் ஏற்படும் காயங்கள் மெதுவாக குணமாகும். கால்களை அடிக்கடி பரிசோதிப்பது அவசியம்.
நீரிழிவு நோயிலானால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பாதங்களை பரிசோதிக்க வேண்டும். கால்விரல்களுக்கு இடையில் மற்றும் கால்களுக்கு அடியில் சரிபார்க்க வேண்டும். அப்போது ஏதேனும் காயங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
வெட்டுக்கள், கீறல்கள் மற்றும் கொப்புளங்கள், நிறத்தில் ஏதேனும் மாற்றம், உடைப்பு அல்லது தோலில் விரிசல், ஏதேனும் அசாதாரண வீக்கம் மற்றும் வலியுள்ள பகுதிகள் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். கால்களை சுத்தமாகவும் உலர்வாகவும் வைக்க வேண்டும். தினமும் மிதமான சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கால்களை கழுவ வேண்டும்.
கால்விரல்களுக்கு இடையில், மென்மையான துண்டு அல்லது சிறிய துணிகளை பயன்படுத்தி பாதங்களை நன்கு உலர வைக்க வேண்டும். கால்விரல்களுக்கு இடையில் ஈரமான அல்லது வியர்வை ஏற்படும்போது பருத்தி துணிகளை பயன்படுத்தி சுத்தமாக துடைக்க வேண்டும்.
வறண்ட சருமத்தைத் தடுக்க, ஈரப்பதமூட்டும் கிரீம் பயன்படுத்தலாம். ஆனால் கிரீம்களை கால்விரல்களுக்கு இடையில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலணியை பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும். காலணிகளை அணிவதற்கு முன் உள்ளேயும் வெளியேயும் சரிபார்க்கவும். தினமும் சாக்ஸ் மாற்ற வேண்டும்.