பொது மருத்துவம்

ஞாபக மறதி அதிகமா இருக்கா? இப்படி டிரை செய்து பாருங்க....

Published On 2024-09-09 04:12 GMT   |   Update On 2024-09-09 04:12 GMT
  • இளம் வயதினரும் நியாபக மறதி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
  • தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு.

ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். சில எளிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஞாபக மறதியை கட்டுப்படுத்தலாம்.


* தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு. தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்து வருவது மனநலத்துக்கு மட்டுமல்ல ஞாபக மறதி பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவும் உதவும். குறிப்பாக நினைவுத்திறனையும், மனநிலையையும் மேம்படுத்தும்.


* மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் செயல்திறனை அதிகரிக்க செய்யலாம். பொதுவாக எந்த வேலை செய்வதாக இருந்தாலும் வலது கையைத்தான் அதிகமாக பயன்படுத்துவோம். அதற்கு மாற்றாக இடது கையை உபயோகிக்கலாம். அதன் மூலம் மூளையின் செயல்திறன் மேம்படும். ஞாபக மறதியின் வீரியம் குறையும்.


* ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதும் மூளை சிறப்பாக செயல்பட உதவும். அதனால் மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் பயிற்சிகளை செய்து வரலாம். யோகாசனங்களும் பலன் கொடுக்கும். அவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும் உதவிடும்.

* உணவுக்கட்டுப்பாடும் அவசியமானது. சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுவும் நினைவாற்றல் திறனை அதிகரிக்க உதவும் புரோக்கோலி, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News