பொது மருத்துவம்

தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கான சித்தமருந்துகள்

Published On 2024-04-17 09:06 GMT   |   Update On 2024-04-17 09:06 GMT
  • அம்மான் பச்சரிசி இலையை கீரையாக சாப்பிட்டு வர வேண்டும்.
  • தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி அல்லது லேகியம்

புரொலெக்டின் ஹார்மோன் மற்றும் ஆக்சிடோசின் ஹார்மோன் சீராக இருந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

பால் சுரப்பை அதிகரிக்க உதவும் சித்த மருந்துகள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள்:

1) தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி அல்லது லேகியம்: காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் வீதம் சாப்பிட வேண்டும்,

2) சவுபாக்கியசுண்டி லேகியம்: காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் வீதம் சாப்பிடலாம்,

3) வெந்தயத்தை பொடித்து, பனை வெல்லம், நல்லெண்ணெய் சேர்த்து களியாக கிண்டி காலை இரவு இருவேளை கொடுக்க வேண்டும். இது போன்று உளுந்தங்களி செய்து சாப்பிடலாம்.

4) பூண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். அல்லது பூண்டு குழம்பு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5) அம்மான் பச்சரிசி இலையை கீரையாக சாப்பிட்டு வர வேண்டும்.

6) பெருஞ்சீரகம் பால் சுரப்பை அதிகரிக்கும், பெருஞ்சீரக டீ அல்லது பெருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடலாம்.

7) பாதாம் பால் குடிக்கலாம். கருப்பட்டியில் செய்த கருப்பு எள்ளுருண்டை சாப்பிட வேண்டும்.

8) பசலைக்கீரை, அரைக்கீரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 9) பப்பாளிக்காயை கூட்டு வைத்து சாப்பிட வேண்டும்.

10) பால், தயிர், கேரட், கேழ்வரகு, முருங்கைக்காய், பாலாடைக்கட்டி, சுறா மீன், பாறை மீன், ஓட்ஸ் கஞ்சி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு.

பூசணி சாறு, பூசணி விதை, ஆளி விதை. ப்ளாக் சீட்ஸ் எனப்படும் அலிசி விதை, பருத்திப் பால், பார்லி கஞ்சி, பாதாம் பருப்பு, செவ்விளநீர், கடல் பாசி இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

11) குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தூங்க வேண்டும். பால் இல்லை என்றாலும் குழந்தையை அணைத்து பால் குடிக்க வைக்க வேண்டும்.

தொடர்ச்சியாக இவ்வாறு செய்வதன் மூலமாக, புரொலெக்டின் மற்றும் அன்புக்குரிய ஹார்மோன் ஆக்சிடோசின் போன்றவை அதிகரித்து பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

Tags:    

Similar News