பொது மருத்துவம்

ஒரு நாளுக்கு இத்தனை Step நடந்தா போதும்.. ஆய்வில் குட் நியூஸ்.. வாக்கிங் போகலாம் போலயே..

Published On 2024-07-12 03:10 GMT   |   Update On 2024-07-12 03:10 GMT
  • நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
  • போதிய உடல் செயல்பாடு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் பெரும்பாலானவர்களுக்கு கடும் சவாலாகவே உள்ளது. உடல் பருமனை குறைக்க காலை நடைபயிற்சி செய்வதில் பலருக்கும் சிரமம் உள்ளது. ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்தால் உடல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று நீண்டகாலமாக சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் சமீபத்திய புதிய ஆய்வு அறிக்கையில் 5,000-க்கும் குறைவான அடிகள் நடந்தால் போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள 2,26,000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, எந்தவொரு காரணத்திற்காகவும் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயத்தைக் குறைக்க 4,000 அடி வரை நடந்தால் போதுமானது என கூறப்படுகிறது.

இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு நன்மை செய்ய 2,300-க்கு மேல் நடந்தால் போதுமானது. 4,000-க்கு மேல் நடக்கும் ஒவ்வொரு கூடுதல் 1,000 அடிகளும் 15% வரை இறக்கும் அபாயத்தை குறைக்கின்றன. நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


மேலும், எங்கு வாழ்ந்தாலும், எல்லா வயதினருக்கும் நடைபயிற்சி நன்மைகளை தருவதை கண்டறிந்ததாக போலந்தில் உள்ள லோட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 60 வயதிற்கு உட்பட்டவர்களிடையே நடைபயிற்சி மிகப்பெரிய நன்மைகள் காணப்பட்டன.

இதனிடையே, லோட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மசீஜ் பனாச், சிகிச்சைக்கான மேம்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவை மட்டும் போதுமானது இல்லை என்று கூறினார்.

"எங்கள் ஆய்வின் முக்கிய கதாநாயகன் உணவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் தான். நடைபயிற்சி இருதய ஆபத்தை குறைப்பதற்கும் ஆயுளை நீடிப்பதற்கும் குறைந்த பட்சம் அல்லது இன்னும் அதிகமாக பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்த வேண்டும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, போதிய உடல் செயல்பாடு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன. இது உலகளவில் ஏற்படும் உயிரிழப்புக்கான காரணிகளில் நான்காவதாக உள்ளது.

Tags:    

Similar News