பொது மருத்துவம்

தாம்பத்திய குறைபாட்டை நீக்க உதவும் உணவுகள்!

Published On 2024-09-02 03:20 GMT   |   Update On 2024-09-02 03:20 GMT
  • மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீங்கும்.
  • மனதுக்கும் உற்சாகத்தை தரும்.

தாம்பத்திய குறைபாடு என்பது நரம்பு, ஹார்மோன், உடல் நலன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது. இந்த பிரச்சனை நீங்க என்ன உணவுகள், பழக்கவழக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

எல்-ஆர்ஜினின், எல்-கார்னிடைன், எல்.சிட்ருலின், எல்.டைரோசின் ஆகிய அமினோ அமிலங்கள், புரோமிலென் என்ற என்சைம், லைக்கோபீன், ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் உங்களுக்கு பயன்தரும். அந்த சத்துக்கள் நிறைந்த உணவுகள்:-


காய்கறிகள்:

தக்காளி, கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை


பழங்கள்:

நேந்திரன் வாழை, செவ்வாழை, பேரிச்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.


விதைகள்:

பூசணி விதைகள், எள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, கடற்பாசிகள். சாக்லேட்டுகள், கருப்பு திராட்சை


அசைவ உணவுகள்:

கோழி இறைச்சி, வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், மத்திச்சாளை, சூரை மீன், கணவாய், இறால், நண்டு, முட்டை, பால்


அரிசி:

சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி

மூலிகைகள்:

சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளில், நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் அமுக்கராக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமி சர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை போன்றவை நரம்புக்கு நல்ல வலுவைத் தந்து தாம்பத்தியத்தில் திருப்தியைத் தரும்.

சித்த மருந்துகளில் மதன காமேஸ்வர லேகியம், சாலாமிசிறி லேகியம் ஆகியவற்றை தலா 1-2 கிராம் வீதம் காலை, இரவு இரு வேளை சாப்பிட வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள உணவு வகைகள், மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் உற்சாகம் பெருகும். ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும்.

Tags:    

Similar News