ப்ராக்கோலி தரும் ஆரோக்கியமான நன்மைகள்
- முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும்.
- அதிக சத்துக்கள் நிறைந்த காய்களிகளில் ஒன்று ப்ராக்கோலி.
பச்சை பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிக சத்துக்கள் நிறைந்த காய்களிகளில் ஒன்றாக ப்ராக்கோலி கருதப்படுகிறது.
ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துப் பொருட்கள் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன.
ப்ராக்கோலியில் உயிர்வளியேற்ற எதிர்ப்பு பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன்கள் மற்றும் சியாசந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
நம் வயிற்றில் உள்ள செரிமான பாதைகளை சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. உயிர் வளியேற்ற எதிர்ப்பு பொருட்கள் அதிகம் இருப்பதும் இதற்கு காரணமாகும்.
பெரும்பாலான காய்கறிகளில் கால்சியம் சத்து இருக்காது. அல்லது குறைவாக இருக்கும். ஆனால் ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்து எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே.