பொது மருத்துவம்

காலையில் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

Published On 2023-05-23 07:34 GMT   |   Update On 2023-05-23 07:34 GMT
  • இறைச்சி வகைகளுடன் சேர்த்து பழங்களை உட்கொள்ளக்கூடாது.
  • பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும்.

அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, சளி, இருமல், ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் அழற்சி, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், அறிகுறிகள் கொண்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

யார் பழங்களை சாப்பிடலாம்?

மலச்சிக்கல், சரும வறட்சி, வறண்ட கூந்தல், செரிமான கோளாறு, வளர்சிதை மாற்ற குறைபாடு போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் பழங்களை சாப்பிடலாம். ஏனெனில் பழங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். செரிமான செயல்பாடுகளை தூண்டும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் பழங்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பால் பொருட்கள், தானியங்கள், இறைச்சி வகைகளுடன் சேர்த்து பழங்களை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அவை நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும்.

காலையில் பழங்கள் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற விவாதம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் செரி மானம், சருமம், கூந்தல், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை மேம்படும் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும் ஒவ்வொரு நபரின் உடல் வகையும், வளர்சிதை மாற்றமும் மாறுபடக்கூடும். அதற்கேற்பவே உணவு பழக்கங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பழத்திலும் பல்வேறு வகையான நொதிகள் மற்றும் அமிலங்கள் உள்ளன. அவை குடலில் உள்ள பாக்டீரியாவுடன் வினை புரிவதை பொறுத்தே சம்பந்தப்பட்ட நபருக்கு நன்மை செய்யுமா? தீங்கு விளைவிக்குமா என்பது தெரியவரும்.

''பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை பால் பொருட்களில் உள்ள லாக்டிக் அமிலத்துடன் விரைவாக வினைபுரிந்துவிடும். ஆனால் காய்கறிகள், தானியங்கள், இறைச்சி வகைகள் போன்றவற்றுடன் நன்றாக கலக்காமல் செரிக்கப்படாத வளர்சிதை மாற்ற கழிவுகளை உருவாக்கிவிடும். அதனால் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளிலும், திசுக்களை உருவாக்கும் செயல்முறைகளிலும் பாதிப்பு ஏற்படலாம்'' என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

காலையில் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

* உடல் நல பிரச்சினைகள் எதுவும் இல்லாதவர்கள் காலையில் பழங்கள் சாப்பிடலாம். நமது உடல் காலை 7 மணி முதல் 11 மணிக்குள் நச்சுக்களை நீக்கும் செயல்முறையை மேற்கொள்ளும். அந்த சமயத்தில் நிறைய கொழுப்பு சத்து அல்லாத உணவுகளை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பழங்களை சாப்பிடுவது நச்சுக்களை நீக்கும் செயல்முறையை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.

* மற்ற உணவுகளை விட பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை. காலை வேளையில் பழங்களை சாப்பிடும்போது அதில் இருக்கும் இயற்கையான சர்க்கரையானது வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை அதிகரிக்கச்செய்யும்.

* காலையில் எழுந்த உடனேயே உடலுக்கு இயற்கையான சர்க்கரை தேவைப்படும். அதனை உட்கொள்வது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க தூண்டும்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News