சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் சுரைக்காய்!
- சிறுநீரகம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு சுரைக்காய் ஒரு நல்ல மருந்து.
- உடலில் உள்ள கெட்ட உப்புகள் அனைத்து சிறுநீரகத்தின் வழியே வெளியேறிவிடும்.
பல நேரங்களில் சுரைக்காயில் உப்பு இல்லை என்று பலர் கூறுவதை கேள்விபட்டிருப்போம். இதற்கு சுரைக்காயில் உப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. உண்மையில் அர்த்தம் வேறு.
சுரைக்காய் என்பது உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை தரும் காய்களிகளில் ஒன்று. சுரைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட உப்புகள் அனைத்து சிறுநீரகத்தின் வழியே வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீர் கோளாறு இருப்பவர்கள் சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் விரைவில் குணமாவார்கள். சிறுநீரகம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு சுரைக்காய் ஒரு நல்ல மருந்து.
சுரைக்காய் உடலில் உள்ள கெட்ட உப்புச்சத்துக்களை வெளியே தள்ளிவிடுவதால் தான் சுரைக்காயை சாப்பிட்டால் உடலில் உப்புச் சத்து இருக்காது என்பதையே சுரைக்காயில் உப்பு இல்லை என்று கூறுகின்றனர்.
சுரைக்காயை வேகவைத்தோ, பொரியல் செய்தோ அல்லது சாம்பார் வடிவத்திலோ, ஜூஸ் செய்தோ சாப்பிடலாம். இதன்மூலம் அனைத்துவிதமான சிறுநீரக கோளாறும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரைக்காயின் பயன்கள்:
* சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.
* சுரைக்காயில் வைட்டமின் பி சி சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து 96. 07 % , இரும்பு சத்து 3. 2 %, தாது உப்பு 0. 5 % பாஸ்பரஸ் 0. 2 % புரதம் 0. 3 % கார்போ ஹைட்ரேட் 2. 3 % போன்ற சத்துக்களை கொண்டுள்ளது சுரைக்காய்.
* சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச் சாற்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சிறந்தது.
* அஜீரண கோளாறு உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடலாம். கோடைக் காலத்தில் சுரைக்காய் சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.
* கை கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
* நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.
* வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
* சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.
* மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறும். சுரையின் இலைகளை நீர்விட்டு ஊற வைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம் பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.
* சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.
* சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம்.