பொது மருத்துவம்

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்

Published On 2023-11-08 06:48 GMT   |   Update On 2023-11-08 06:48 GMT
  • கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும்.
  • வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும்.

மர வகையை சேர்ந்தது இலந்தை மரம். கிளைகளில் முட்கள் நிறைந்து காணப்படும். வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை 9 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. இலந்தை பழம் சிவப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இதன் சுவை புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் இருக்கும். இதன் இலை, பழம், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது.

இலந்தை இலை மற்றும் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும். நாவறட்சி, அதிக தாகம், இருமல், உடல் உள் உறுப்பு புண்ணை குணப்படுத்தும்.

இலந்தை பழத்தில் வைட்டமின் -சி சத்து நிறைந்து இருக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பிளவனாய்டு, பீமால், சப்போனின் போன்ற சத்துக்களும் அதிகம். இவை சிறந்த ஆன்டி ஆக்டிடன்ட்டாக செயல்படும்.

இலந்தை பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும். கெட்ட கொழுப்பு குறையும். நன்றாக பசிக்கும். முகத்தில் சுருக்கங்கள் நீங்கும். இளமை தோற்றம் கிடைக்கும்.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுவோர் இலந்தை பழம் சாப்பிடலாம். உடலில் நீர்ச்சத்து இழப்பை சரிசெய்ய முடியும். ஞாபக சக்தியை தரும். சீன பாரம்பரிய மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் இலந்தை பழத்தின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

பசியில்லாமல் அவதிப்படுபவர்கள், செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்கள் இலந்தை பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

Tags:    

Similar News