பொது மருத்துவம்

தொற்று அல்லாத கண் பார்வை பிரச்சனை- அதிர்ச்சி ரிப்போர்ட்....

Published On 2024-05-17 07:09 GMT   |   Update On 2024-05-17 07:09 GMT
  • வறண்ட கண்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்களை எரிச்சலூட்டுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்தும்.
  • நரம்புகள் தான் நமது கண்களின் தெளிவாக பார்வைக்கு அவசியம்.

அதிக காற்று, புகை, மற்றும் அதிக வெயில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது நம்முடைய கண்கள் வறண்டுவிடும். முக்கியமாக தற்போது பலரும் பல மணிநேரம் செல்போன் பார்ப்பது, கணினி, அல்லது லேப்டாப் முன்னிலையில் உட்கார்ந்து பணிபுரிந்துவருவதால் கண்களில் தண்ணீர் வற்றி கண்கள் வறண்டு விடுகிறது.

மனித உடலில் முக்கியமான பாகங்களில் ஒன்று தான் கண்.. கண்கள் இல்லையென்றால் நமக்கான வேலையைக்கூட நம்மால் செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்தை நாம் சந்திக்க நேரிடும். இதனால் தான் கண்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால் கூட சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்..

மற்ற நாடுகளை விட இந்தியர்களுக்குத் தான் தொற்று அல்லாத கண் பார்வை பிரச்சனை அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். இதை நாம் அலட்சியமாக விட்டுவிடும் போது தான், நிரந்தர பார்வை இழப்பு கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இந்நேரத்தில் தடுக்கக்கூடிய சில பொதுவான தொற்று அல்லாத கண் நோய்கள் என்னென்ன என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்.


நம்முடைய கண்களை எப்போதும் ஈரமாகவும், ஆரோக்கியமாகவும், நோய்த்தொற்று இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் கண்களில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போது கண்கள் வறட்சியமாக உலர் கண்கள் பிரச்சனையை நமக்கு ஏற்படுத்துகிறது. இதனால் வறண்ட கண்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்களை எரிச்சலூட்டுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்தும்.

அதிக காற்று, புகை, மற்றும் அதிக வெயில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது நம்முடைய கண்கள் வறண்டுவிடும். முக்கியமாக தற்போது பலரும் பல மணிநேரம் கணினி அல்லது லேப்டாப் முன்னிலையில் உட்கார்ந்து பணிபுரிந்துவருவதால் கண்களில் தண்ணீர் வற்றி கண்கள் ட்ரை ஆகிறது. எனவே தான் நீங்கள் வெளியில் செல்லும் போது எப்போதும் சன்கிளாஸ் அணிய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதோடு கண்கள் ட்ரை ஆவதைத்தடுப்பதற்கு வேலையின் இடையில் நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கிளௌகோமா என்பது பார்வை நரம்புக்குத் தீங்கு விளைவிக்கும் கண் பாதிப்பாகும். நரம்புகள் தான் நமது கண்களின் தெளிவாக பார்வைக்கு அவசியம். இது நீரழிவு, கண் அதிர்ச்சி மற்றும் செயலற்ற தன்மை போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு முற்றும் போது உங்களுக்கு பார்வை இழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, கிளௌகோமாவைத் தடுப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று வழக்கமான கண் பரிசோதனைகள் தான். மேலும் வழக்கமான உடற்பயிற்சி கண் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதோடு கண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டுகளை விளையாடும் போது கண்ணாடி அணிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் என்பது கண்களின் ஒரு பொதுவான கோளாறு ஆகும், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது கண்ணின் பின்பகுதியை பாதிக்கிறது. இதனால் உங்கள் எதிரில் உள்ள பொருட்களை நேரடியாகப் பார்ப்பது மிகவும் கடினம். இதோடு கண்களில் ஏற்படும் வயது தொடர்பான மாற்றங்கள் தான் கோளாறுக்கு வழிவகுக்கும். ஒருவேளை நீங்கள் இதை முறையாக சிகிச்சை மேற்கொண்டு கண்டறியவில்லை என்றால், ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

பல்வேறு வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, வயது தொடர்பான மாகுலர் சிதைவை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இப்பிரச்சனையை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால், புகைப்பிடிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இதோடு வழக்கமான உடற்பயிற்சி, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைப் பராமரித்தல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது போன்ற விஷயங்களை உங்களது வாழ்வில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இப்பிரச்சனை ஏற்படாமல் நீங்கள் தடுக்க முடியும்.


தொற்று அல்லாத கண் பார்வை பிரச்சனைகளில் ஒன்று தான் கிட்டப்பார்வை. மரபுரீதியாக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொலைவில் உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரியும். அதே சமயம் தூரத்தில் உள்ள பொருள்கள் மங்கலாகத் தெரியும். இதோடு இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும்.

கிட்டப்பார்வைக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், கிட்டப்பார்வையை வளர்ப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்க நீங்கள் உங்களது அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக திரை இடைவெளிகளை எடுத்தல், டிஜிட்டல் சாதனங்களில் உங்களின் நேரத்தைக் கட்டுப்படுத்துதல், மங்கலான வெளிச்சத்தில் வேலை செய்யவோ படிக்கவோ வேண்டாம், வெளியில் நேரத்தை செலவிடுங்கள், வெளியில் செல்லும்போது சன்கிளாஸ் அணிதல், புகைப்பிடிப்பதை நிறுத்துதல், வழக்கமான கண் பரிசோதனை போன்றவற்றை நீங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News