பொது மருத்துவம்

மூட்டுத் தேய்மானத்திற்கு PRP சிகிச்சை- விளக்கம் தருகிறார் Dr. Lakshminathan

Published On 2024-09-12 08:00 GMT   |   Update On 2024-09-12 08:00 GMT
  • மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது.
  • கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.

உடல் உழைப்பு மற்றும் உடற்பயிர்சி இல்லா வாழ்க்கை முறை, ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்து பணியாற்றுவது போன்றவர்களுக்கு மூட்டுத்தேய்மானம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும். நடக்க, அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமம், கால் வலி, மூட்டு இறுக்கமாகுதல், காலை இயல்பாக நீட்டி மடக்க முடியாதது, கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.

உடல் பருமனாக இருப்பவர்கள், எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்தே இருப்பவர்கள், அதிகமான உடலுழைப்பை செலுத்தி வேலைகள் செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், தேய்மானத்தின் பாதிப்புக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

பிசியோதெரபி பயிற்சி, பணிகளை மாற்றி செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற எளிமையான வழிமுறைகள் வாயிலாக பாதிப்பு தீவிரமடையாமல் தடுக்கலாம்.

உணவுமுறைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். ஏனென்றால் துரித உணவுகளை சாப்பிடும் போது உடல் பருமன் ஏற்பட்டு மூட்டுவலி ஏற்படும். இதனால் டயட் ஃபாளோ செய்ய வேண்டும். 

மேலும் மூட்டு தேய்மானத்திற்கான ப்ரப் சிகிச்சை பற்றி விரிவான விளக்கம் அளிக்கிறார் டாக்டர் லட்சுமிநாதன்.

Full View
Tags:    

Similar News