பொது மருத்துவம்

தாய்ப்பாலுக்கு நிகரான ஸ்பைருலினா

Published On 2024-06-28 07:56 GMT   |   Update On 2024-06-28 07:56 GMT
  • விஞ்ஞானிகளுக்கான உணவாக நாசாவாலும் அங்கீகரிக்கப்பட்டது ‘ஸ்பைருலினா’ (Spirulina) எனும் சுருள்பாசி.
  • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உப உணவாக பயன்படுத்தலாம்.

எதிர்காலத்துக்கான சிறந்த உணவு என்று உலக சுகாதார நிறுவனத்தாலும் விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்லும் விஞ்ஞானிகளுக்கான உணவாக நாசாவாலும் அங்கீகரிக்கப்பட்டது 'ஸ்பைருலினா' (Spirulina) எனும் சுருள்பாசி.

மிகக் குறைந்த விலையில், நிறைந்த சத்துக்களைக்கொண்ட ஒரு மகத்துவ உணவு. சயனோ பாக்டீரியா குடும்பத்தைச் சேர்ந்த சுருள்பாசியான ஸ்பைருலினா, நன்னீரில் மிதந்து வாழும் தன்மையைக்கொண்ட, நீலப்பச்சைப் பாசி.

*ஒரு கிலோ ஸ்பைருலினா உணவு, ஆயிரம் கிலோ காய்கறிகளுக்குச் சமமான சத்துக்களைக்கொண்டது. எளிதில் செரிமானம் ஆகும் தன்மையும், அதிக அளவு புரதமும் இருப்பதால், உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

ஸ்பைருலினாவில் இருக்கும் காமாலினோலெனிக் அமிலம், உலகில் தாய்ப்பாலைத் தவிர வேறெந்த ஒரு உயிரினத்திலும் இல்லை. இந்த அமிலம்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, உடலை வலுவாக்குகிறது. மற்ற எந்த உணவையும் விட, மிக அதிக அளவில் சீரணமாகும் தன்மையுள்ள புரதச்சத்துக்கள் நிரம்பி உள்ளது.

ஸ்பைருலினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்...

இந்த சுருள் பாசியில் மனித உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ,டி,இ,கே, அமினோ ஆசிட், காமாலினோலெனிக் அமிலம், புரதம் (55% முதல் 65%வரை), மக்னீசியம், நைட்டனின் ஏ, பீட்டா கரோட்டின் , வைட்டமின் பி6,பி12, இரும்புச்சத்து, கார்போஹைட்டிரேட், சூப்பர் ஆக்ஸைடு டிஸ்மியூட்டேஸ் (SOD)போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் அனைத்து வகையான தாதுக்களும் உள்ளன.


பயன்கள்

மனிதர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து தயாரிப்பில் முக்கியமாக இந்தப் பாசி பயன்படுகிறது.

அழகு சாதன பொருட்கள் தயாரிக்க, மீன்களின் வளர்ச்சியை அதிகபடுத்தும் உணவாக, மாடுகளை அதிக அளவில் பால் கறக்கச் செய்யும் தீவனமாக, பட்டுப்புழுவின் தரத்தை அதிகரிக்கும் வகையில் பட்டுப் புழுவுக்கு உணவாக, 'கொழுகொழு'வென கோழிகள் வளர்வதற்கு என்று ஸ்பைருலினா பாசியின் பயன்பாட்டு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைருலினாவில் உள்ள புரதம் எளிதில் ஜீரணிக்கும் தன்மை கொண்டது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உப உணவாக பயன்படுத்தலாம்.

தாதுக்கள்

இவற்றில் அனைத்து வகையான தாதுக்களும் அடங்கியுள்ளது. உடலை சீராக இயக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.

மக்னீசியம்

ஸ்பைருலினாவில் தாய்ப்பால் சுரப்பதற்குத் தேவையான தாது உப்புகளாகிய மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் இருப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவுகிறது.

வைட்டமின் ஏ

கண்பார்வை சீராக இருப்பதற்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உண்பது அத்தியாவசியமானது. பிற உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைருலினாவில் இச்சத்து அதிகளவில் உள்ளது.


பீட்டா கரோட்டீன்

இது கேரட்டில் இருந்து கிடைக்கக்கூடிய அளவைவிட ஸ்பைருலினாவில் இருந்து 10 மடங்கு அதிகமாக கிடைக்கிறது.

வைட்டமின் பி6-பி12

ஸ்பைருலினாவில் இவை மிகுந்து காணப்படுவதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரின் கணையம் சீராக செயல்பட்டு இன்சுலினை தேவையான அளவு சுரக்கச் செய்து இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

இரும்புச்சத்து

மற்ற உணவுப் பொருட்களைவிட ஸ்பைருலினாவில் 15 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது.

கார்போஹைட்ரேட்

நேரடியாக ஸ்பைருலினாவிலிருந்து நமது உடலுக்கு கிடைக்கிறது.

காமாலினோலெனிக் அமிலம்...

இவை ஸ்பைருலினாவிலிருந்து நேரடியாக கிடைப்பதால், உடலில் கொழுப்புச்சத்து சீராக இருப்பதற்கு உதவி புரிந்து உடல் பருமனை குறைக்கின்றது.

ஸ்பைருலினாவில் காமா லினோலினிக் அமிலம் இருப்பதால் தாய்ப்பாலுக்கு நிகரான உணவாக அமைகிறது.

சூப்பர் ஆக்சைடு டிஸ்மியூட்டேஸ் (SOD)

உடலில் இறந்த செல்களுக்கு புத்துயிர் கொடுக்கவல்லது. புற்றுநோய் மற்றும் குடல்புண் போன்ற நோய்களை தீர்க்கவல்லது.

புத்துணர்ச்சி அளிக்கும்

ஸ்பைருலினாவை தினமும் உட்கொண்டு வந்தால் அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதன்மூலம் உடலின் கலோரி அளவு குறைந்து உடல் எடை வேகமாக குறையும்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்து

நிறைவுறா ஒமேகா மற்றும் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது

ஹார்வார்டு மெடிக்கல் ஸ்கூல் போஸ்டன் (1996 1998) ஸ்பைருலினா தொடர்பாக நடத்திய ஆய்வின் முடிவில் ஹெச்.ஐ.வி.வைரஸ் மேலும் மேலும் பெருக்கமடையாமல் தடுப்பதுடன் எய்ட்ஸ் நோயாளிகள் அதிக நாட்களுக்கு உயிர் வாழ உதவுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.


யாரெல்லாம் ஸ்பைருலினா சாப்பிடலாம்...

ஸ்பைருலினாவில் உள்ள அதிகபட்ச செரிக்கும் தன்மைகளுடைய புரதத்தால், இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சிறுவர்கள் முதல் தாய்மார்கள் வரை, உடல் உழைப்பாளர்கள் முதல் மன உழைப்பாளர்கள் வரை, பாமரன் முதல் மேதைகள் வரை, எல்லோரும் உபயோகிக்கலாம், ஸ்பைருலினா அடைத்த கேப்ஸ்யூல்களையே, விண்வெளி வீரர்கள் உணவாக பயன்படுத்துகின்றனர்.

உலகினில் தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில், அனைத்து சத்துகளும் கொண்டுள்ள ஸ்பைருலினா, பசும்பாலைவிட, நான்கு மடங்கு கூடுதல் சத்து மிக்கது.

இத்தகைய நலம்தரும் தன்மைகளாலேயே, ஐக்கிய நாடுகள் சபை ஸ்பைருலினாவை முழு ஊட்டச்சத்துள்ள உணவாக, அங்கீகரித்திருக்கிறது.

Tags:    

Similar News