சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை இப்படி சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை
- மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
- உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கோடை காலம் வந்துவிட்டாலே மாம்பழ சீசன் தான் நினைவுக்கு வரும். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு என்னதான் மாம்பழம் பிடித்திருந்தாலும் அதனை சுவைத்து சாப்பிட முடியாது. ஏனென்றால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடும் போது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
எனவே தான் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடுவதற்கு பல முறை யோசிப்பார்கள். மாம்பழம் சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு அதிகமாகாமல் எப்படி தவிர்ப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு மாம்பழத்தில் குறிப்பாக 50 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும் போது ஒரு நாளைக்கு அரை மாம்பழம் சாப்பிடுவதால் எந்தவித சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது.
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிட வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் அதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அதற்காக மாம்பழத்துடன், சியா விதை, வால்நட், ஊறவைத்த பாதாம் அல்லது எலுமிச்சை தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பு நடைபயிற்சி செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் மாம்பழத்தை அப்படியே வெட்டி சாப்பிட வேண்டும். ஜூசாகவோ அல்லது ஸ்மூத்தி, ஐஸ்கிரீம், மூஸ் போன்றவையாகவோ சாப்பிடக்கூடாது. இதில் தான் அதிகளவு சர்க்கரை உள்ளது.
உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் மாம்பழத்தை தவிர்த்து விடுவதே நல்லது. அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
அதேபோல மாம்பழத்தை உணவுக்கு பிறகு அல்லது இனிப்பாக உட்கொள்ளவோ கூடாது. உணவுக்கு இடையில் ஒரு சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். தயிர், பால், நட்ஸ் போன்ற பாகங்களுடன் இதை சேர்த்து சாப்பிடலாம்.
மாம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது தான். ஆனாலும் தினமும் மாம்பழச்சாறு குடிக்கக்கூடாது.
மாம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாம்பழ மில்க்ஷேக் போன்றவற்றை எடுத்துக்கொள்ள கூடாது. இதனால் செரிமான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இரவில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாம்பழத்தை காலை அல்லது மதியம் சாப்பிடலாம். மாம்பழத்தை தனியாக சப்பிடுவதை விட ஓட்ஸ் அல்லது சாலட்டாக செய்து சாப்பிடலாம்.
இருப்பினும் மாம்பழம் நமது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. மாம்பழத்தில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம், தயாமின், காப்பர், ஃபோலேட், வைட்டமின் பி6, ரிபோஃப்ளேவின் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. எதனையும் அளவாக எடுத்துக்கொள்வதே சிறந்தது. அதுவும் சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ள வேண்டும்.