பொது மருத்துவம்

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Published On 2024-10-17 05:58 GMT   |   Update On 2024-10-17 05:58 GMT
  • அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களை செய்து கொள்வதும் மிகவும் அவசியம்.
  • சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இதயநோய் மீண்டும் தாக்கும் அபாயத்தை தடுக்கவும், மீண்டும் தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவும், அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களை செய்து கொள்வதும் மிகவும் அவசியம்.


அறுவை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய முதல் வாரம் உங்களது அன்றாட வேலைகளை பழையபடி தொடர்வது முக்கியம். சிலநேரங்களில் ஒரு சிறு வேலைகூட உங்களை களைப்படையச் செய்யும். மூச்சு விடுவதற்கு சிரமமாகத் தெரியலாம். ஆனால் இது சாதாரணமான விஷயம் தான்.

நீங்கள் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால் மீண்டும் உங்களது தினசரி வேலைகளை செய்வதற்கு முன்னாள் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். 4 முதல் 8 வாரத்தில் உங்களது இயல்பான நிலை மீண்டும் திரும்பும்.

உங்களது அன்றாட தினசரி வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வு எடுப்பது முக்கியம். அன்றாட வேலைகளும், உடற்பயிற்சிகளும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முக்கியமானதாக இருந்தாலும் சரியான வேலைக்கும், அதிகப்படியான வேலைக்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது.


உங்கள் தினசரி வேலைகளை திட்டமிடுவது போல் அவ்வப்போது இடை இடையே ஓய்வெடுக்கவும் திட்டமிடுதல் அவசியம். இரவில் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது அவசியம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முதல் சில வாரங்கள் தினமும் பகலில் ஒரு குட்டி தூக்கம் தூங்கலாம்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆஸ்பத்திரியில் உடற்பயிற்சி செய்து இருப்பீர்கள். உடற்பயிற்சி செய்வது உடல் பலத்தை மேம்படச் செய்ய உதவுகிறது. உங்களது இதயத்தின் பலத்தை அதிகரிக்கச் செய்வதுடன் எதிர்காலத்தில் இதயநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் உதவும்.


நடைபயிற்சி செய்வதற்கு சமதள இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தையல்களை பிரித்த பிறகு பூங்காவிலோ அல்லது வீட்டு வளாகத்திலோ நடைபயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படுத்தும் சக்தியின் விகிதாச்சாரம் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

Tags:    

Similar News