வைட்டமின் பி12 குறைபாடு: ஆண்கள் உஷார்...
- ஆண்கள் இரவில் கால்களில் கூச்ச உணர்வு இருந்தால் வைட்டமின் பி12 சரிபார்ப்பது நல்லது.
- வைட்டமின் பி12 குறைபாடு பரிசோதனை எடுத்து கொள்வது அபாயம் அதிகரிக்காமல் தடுக்க உதவும்.
வைட்டமின் பி12 என்பது சையனோகோபாலமின் என்று அழைக்கப்படுகிறது. இது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் டிஎன்ஏ - உருவாக்குவதில் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் என பலவற்றிலும் முக்கியத்துவம் பெறுகிறது. உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான ஊட்டச்சத்து இது. வைட்டமின் பி12 உணவில் இருந்து பெறலாம் என்றாலும் போதுமான ஊட்டச்சத்தை பெற முடியாத போது இது இரத்த சோகை , சோர்வு, நரம்பியல் சிக்கல்கள் உண்டு செய்யும். உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியம். வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும் போது ஆண்களுக்கு தென்படக்கூடிய அறிகுறிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
ஆண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும் போது கால்களில் கூச்ச உணர்வு இருக்கும். பரேஸ்டீசியா என்று அழைக்கப்படும் இந்த நிலை வைட்டமின் பி12 இல்லாததால் உண்டாகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இவை அதிகமாக இருக்கும். ஆண்கள் இரவில் கால்களில் கூச்ச உணர்வு இருந்தால் வைட்டமின் பி12 சரிபார்ப்பது நல்லது.
ஆண்கள் கால்களில் உணர்வின்மை அல்லது அசாதாரண உணர்வு என்பது அசெளகரியமானது. வைட்டமின் பி12 குறையும் போது இரவு நேரத்தில் கால்கள் உணர்ச்சியற்றதாக இருக்கலாம். இந்நிலையில் பி12 அளவை சரிபார்க்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் நீரிழிவு நோயுடன் இதை தொடர்பு படுத்தி பார்ப்ப்பார்கள். ஆனால் வைட்டமின் பி12 குறைபாடும் கால்களில் உணர்வின்மை ஏற்படுத்தும்.
நடப்பதில் சிரமம் அல்லது மாலை அல்லது இரவு நேரங்களில் இதன் தாக்கம் அதிகம் இருந்தால் அதற்கு காரணம் வைட்டமின் பி12 குறைபாடாகவும் இருக்கலாம். கால் வலி பொதுவாக வைட்டமின் குறைபாடுடன் தொடர்பு படுத்தி பார்க்கமாட்டார்கள். ஆனால் இந்நிலை மோசமான வைட்டமின் பி 12 குறைபாடாக இருக்கலாம்.
பலவீனமான பாதங்கள் குறிப்பாக இரவு நேரங்களில் பாதங்கள், கால்கள் பலவீனமாக இருந்தால் உடலில் வைட்டமின் பி12 போதுமான அளவு இல்லாமல் இருக்கலாம். இந்நிலையில் தசை பலவீனம் உடலை சமநிலைப்படுத்தும் வழியில் முழு உடல் ஒருங்கிணைப்பையும் கீழ் உடலில் கால்களிலும் பாதங்களிலும் செலுத்துவதால் இவை ஒட்டுமொத்த வலிமையை பாதிக்கலாம். இதனால் கால் மற்றும் பாதங்களில் வலி அதிகமாக இருக்கும்.
வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் அது உடலின் சமநிலையை பராமரிப்பதில் சிரமமாக இருக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எனில் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும் போது நிற்கும் போது அல்லது நடக்கும் போது சமநிலையை வைத்திருப்பது கடினமாக இருக்கும். இதனால் காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
மேற்கண்ட அறிகுறிகள் இரவில் அதிகரிக்கும் போது வைட்டமின் பி12 குறைபாடு பரிசோதனை எடுத்து கொள்வது அபாயம் அதிகரிக்காமல் தடுக்க உதவும்.
வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்
• அசைவ உணவுகளில் விலங்குகளில் ஈரல் மற்றும் சிறுநீரகம்
• கடல் உணவுகள் - சால்மன், டுனா மீன்
• முட்டை, பால், தயிர், சீஸ்
• வாழைப்பழம்
• பெர்ரி பழங்கள்
• தானியங்கள்
• கீரைகள் போன்றவற்றை சேர்க்கலாம்.
தினசரி அளவில் ஆண்கள் 9-13 வயது பிள்ளைகளுக்கு 1.8 mcg 14-18 வயது ஆண் பிள்ளைகளுக்கு -2.4 mcg மற்றும் 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 2.4 mcg அளவும் தேவை.