- வைட்டமின்-டி உடலின் பொது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இன்றியமையாதது.
- இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதில் வைட்டமின்-டி முக்கியப் பங்கு வகிக்கிறது.
சூரியஒளி உயிர்சத்து என்று அழைக்கப்படும் வைட்டமின்-டி உடலின் பொது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இன்றியமையாதது.
வைட்டமின்-டி எலும்புகளை வலிமையாக பராமரிக்க உதவுவதோடு இதய நோய், நீரிழிவு, மூட்டு தேய்மானம் வராமல் தடுப்பதுடன் உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவுகிறது.
உடலில் வைட்டமின்-டி குறைபாடு ஏற்பட்டால் இடுப்பு வலி, மூட்டு வலி, தசை பலவீனம் அல்லது தசைப்பிடிப்பு, எலும்பு வளர்ச்சி அல்லது பற்கள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படும்.
நீண்ட கால வைட்டமின்-டி குறைபாட்டால் எளிதில் எலும்பு முறிவு, மூட்டு விலகல் ஏற்படும். மிக நாள்பட்ட நிலையில் மூட்டு தேய்மானம் ஏற்பட்டு நடக்க இயலாத நிலையை உருவாக்கும். பொதுவாக, எலும்புகளில் வலி காணப்படும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின்-டி முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் போதுமான வைட்டமின்-டி இருந்தால் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.
வைட்டமின்-டி இதய செயல்திறனை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட அளவு வைட்டமின்-டி உடலில் இருக்கும் போது டைப்-2 வகை நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. இன்சுலின் உணர்திறன் வைட்டமின்-டி மூலம் கட்டுக்குள் வருகிறது. இது ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
சூரிய ஒளியில் இருந்து உடலின் தோலானது இயற்கையாகவே வைட்டமின்-டி சத்ைத உற்பத்தி செய்யும். உடலில் வைட்டமின்-டி குறைவாக இருக்கும்போது அதனை சரிசெய்ய மூலிகைகள் உதவுகின்றன.
அஸ்வகந்தா, சதாவரி மற்றும் சீந்தில் ஆகிய மூலிகைகள் குறிப்பிடத்தக்கவை. இந்த மூலிகைகளை டாக்டர்கள் பரிந்துரைப்படி உண்ணலாம். ஆரஞ்சுப்பழம், காளான், மீன் மற்றும் முட்டையில் வைட்டமின்-டி சத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.