நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி தலைசுற்றல் வருவதற்கு காரணம் என்ன?
- நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதன் காரணமாக நீரிழப்பு அதிகளவில் இருக்கும். இதன் காரணமாகவும் தலை சுற்றல் ஏற்பட்ட்டு, மயக்கம் வரும். இரத்த சர்க்கரை அளவு அதிகமாதல், இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு காரணமாக திடீரென்று மயக்கம் வர வாய்ப்புகள் அதிகமுள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு தலை சுற்றல் ஏற்படுவதற்கு கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றோ அதற்கு மேலும் இருக்கலாம்:
ரத்த சர்க்கரை தாழ்நிலை (ஹைபோ கிளைசீமியா), ரத்த சர்க்கரை அதிகரித்தல், நீரிழப்பு (வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது வேறு காரணங்களாலோ உடலில் இருந்து அதிகப்படியான நீரை இழக்கும் போது ஏற்படும் நிலை), குறைந்த ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், மீனியர் நோய் (இது ஒரு சமநிலை கோளாறு ஆகும்.
இதில் காதில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அதிகம் சேர்வதால் காதுகளுக்குள் அழுத்தம் எற்படும். இந்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும் போது மூளைக்கு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு தலை சுற்றல் ஏற்படுகிறது), கழுத்து எலும்பு தேய்மானம், இதய கோளாறு, ரத்த சோகை, அதிகமான கொலஸ்ட்ரால் அளவு, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை, உட்கொள்ளும் மாத்திரைகள் செயல்பாடுகள். (உதாரணமாக - சர்க்கரை அளவை குறைக்க, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு பாதிப்புக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் செயல்பாடுகள்)
எனவே நீரிழிவு நோயாளிகள் தலைசுற்றல் ஏற்படும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து மேற்கூறிய காரணங்கள் ஏதேனும் உள்ளதா என கண்டறிந்து, அதற்குரிய மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health