IVF பண்ணப்போறீங்களா? இத தெரிஞ்சுக்கிட்டு போங்க... IVF-IUI வித்தியாசம் என்ன?
- IVF சிகிச்சை முறை.
- IUI சிகிச்சை முறை.
குழந்தையின்மைக்கு என்ன காரணம்?
ஆணுக்கும், பெண்ணுக்கும் 30 வயதை கடந்தவுடன் இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை குறைந்துவிடுகிறது. இதற்கு காரணம் கருமுட்டை குறைந்துவருவதாலோ அல்லது உயிரணுக்கள் செயல்பாடு குறைவாக இருப்பதனால் இருக்கலாம்.
குழந்தையின்மை பிரச்சனை உள்ள பெண்கள் செய்ய வேண்டியவை?
மேலும் ஒரு பெண்ணுக்கு அவருடைய இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை நன்றாக இருக்கிறதா அல்லது கட்டிகள், சதை வளர்ச்சி ஏதும் இருக்கிறதா, பெலோப்பியன் குழாய்களில் அடைப்புகள் ஏதும் இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்ய வேண்டும்.
அடுத்து மிக முக்கியமான விஷயம் கருமுட்டையில் ஒவ்வொரு மாதமும் உருவாகும் கருமுட்டை அல்ட்ரா சவுண்ட் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் பரிசோதனை செய்யப்படும்.
IUI சிகிச்சை
ஆண்களுக்கு விந்தணுக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது, அவர்களுடைய விந்தணுக்களை எடுத்து அதில் தரமான உயிரணுக்களை பிரித்து எடுத்து அதனை ஒரு பெண்ணின் கருப்பையில் சேர்ப்பது தான் IUI சிகிச்சை முறை.
இதை யார் யாருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றால் 30-ல் இருந்து 35 வயதுக்குள் இருக்கும் தம்பதியினருக்கு இந்த சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும். இதற்கு ஒரு பெண்ணின் கருமுட்டையின் தரம் நன்றாக இருக்க வேண்டும், ஆணின் உயிரணுக்களின் தரமும் நன்றாக இருக்க வேண்டும்.
மேலும் முக்கியமாக பெண்ணுக்கு கருப்பை டியூப்களில் அடைப்பு எதுவும் இருக்கக்கூடாது. அதன்பிறகு கருப்பையில் உள்ள எண்டோமெண்ட்ரியம் அது தான் கரு பதியும் இடம் எனவே அது உறுதியாக இருக்க வேண்டும்.
இந்த சிகிச்சை முறையை 30-ல் இருந்து 35 வயதிற்குள் உள்ளவர்களுக்கு மட்டும் குறைந்தது 4 முறை மட்டுமே அளிக்கப்படுகிறது.
40 வயதை தாண்டியவர்களுக்கு இந்த சிகிச்சை பலன் அளிக்குமா என்றால், சற்று சிரமம் தான். 40-ல் இருந்து 45 வயதிற்குள்ளாக ஒரு பெண்ணின் கருமுட்டையின் வளர்ச்சி குறையத் தொடங்குவதால் இந்த சிகிச்சை பலன் அளிக்காது.
IVF சிகிச்சை என்றால் என்ன?
இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத தம்பதிகள் அல்லது கர்ப்பம் நிற்காத பெண்களுக்கு, IVF சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். இந்த செயல்முறை பாதுகாப்பானதாகவும் வெற்றிகரமாகவும் கருதப்படுகிறது. இதனாலேயே இந்த சிகிச்சை இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது.
இதற்கு முதலில், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட கரு எந்த தரத்தில் உள்ளது என்று பார்க்கப்படுகிறது. இரண்டாவது மிக முக்கியமான விஷயம் பெண்ணின் வயது. இந்த இரண்டு விஷயங்களும் சரியானதாக இருந்தால், IVF -ன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த IVF சிகிச்சைக்கு முன், பெண்ணின் கருப்பையின் திறன் மற்றும் ஆணின் விந்தணுவின் தரம் ஆகியவை ஆராயப்படுகின்றன. அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகு IVF சிகிச்சை அளிக்கப்படுகிறது.
IVF சிகிச்சையில் தம்பதியினர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமன விஷயம் என்னவென்றால் இதில் 2 பகுதி உள்ளது. முதல் பகுதியில் பெண்ணிடம் இருந்து கருமுட்டை எடுப்பது, தரமான கருமுட்டைகளை எடுத்து ஆணின் உயிரணுக்களுடன் சேர்த்து கருவை வளர வைப்பது எல்லாமே லேப்பில் நடக்கும், இரண்டாம் பகுதி எம்ரியோ டிரான்பர் அதாவது உருவான கருவிலேயே நல்ல தரமான கருவை எடுத்து கருப்பையில் சேர்ப்பது. இது தான் IVF சிகிச்சை முறை ஆகும்.