பெண்கள் உலகம்

சானிட்டரி நாப்கின் புற்றுநோயை ஏற்படுத்துமா?

Published On 2024-10-21 07:41 GMT   |   Update On 2024-10-21 07:41 GMT
  • பெண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளைக் கொடுக்கின்றன.
  • கர்ப்பப்பை புற்றுநோய், பலவீனமான கரு நீரிழிவுக்கு காரணமாக இருக்கிறது.

இந்தியாவில் 64 சதவீத பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் நாப்கின்களும், ஆண்டுக்கு சராசரி 12.3 பில்லியன் நாப்கின்களும் பயன்படுத்தப்படுகின்றன.


பிளாஸ்டிக்கை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளைக் கொடுக்கின்றன.

மாதவிடாய் சமயங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின்கள் மரக்கூழ், பிளாஸ்டிக் மற்றும் பாலிஎத்திலீன் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அதிக ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால் பாலிமர் ஜெல் எனப்படும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஆனால் இது இயற்கைக்கு மட்டுமல்லாது உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடியது.

எனவே 1980-களிலேயே SAP என்ற ரசாயனத்தை, அமெரிக்கா தடை செய்துள்ளது. ஆனால் தற்போது பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களில் இதே ரசாயனம் சேர்க்கப்படுவதாக நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரசாயனம் கர்ப்பப்பை புற்றுநோய், பலவீனமான கரு உருவாவது மற்றும் நீரிழிவுக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பாதிப்புகள்:

* பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால் பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். எனவே 4 மணிநேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பேடுகளை மாற்ற வேண்டும்.

நாப்கின்களினால் தொற்று ஏற்பட்டு பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும் போது வலி போன்றவை இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.


நாப்கின்களை எப்படி பயன்படுத்த வேண்டும்:

மாதவிடாய் நாட்களில் 6 மணிநேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ரத்தப்போக்கு அதிகம் உள்ள நாட்களில் 3 அல்லது 4 மணிநேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

துணியாக இருந்தால் சுத்தமான பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். உபயோகித்த துணிகளை சோப்பு போட்டு சுடுநீரில் அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு மடித்து ஒரு பையில் வைத்து காற்றோட்டமான இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.

காயவைத்த நாப்கின் துணிகளை அயர்ன் செய்வதும் கிருமிகள் பரவுவதை தடுக்கும். பாதுகாக்கப்பட்ட துணியாக இருந்தாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


நாப்கின்களை எப்படி அப்புறப்படுத்த வேண்டும்:

நாப்கின்களை பொறுத்தவரை அதனை பயன்படுத்துபவர்களை விட மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் விளைவுகள் தான் அதிகம்.

ஒரு பெண் உபயோகப்படுத்தி தூக்கி எறியும் நாப்கின் கழிவுகள் சராசரியாக ஒரு வருடத்துக்கு 150 கிலோ கிராம் என்கிறது ஆய்வு. இதில் உள்ள பிளாஸ்டி அடுக்குகள் மண்ணில் இருந்து முற்றிலுமாக மறைய சுமார் 800 வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிட்டுள்ளனர்.

நாப்கின்களை செய்தித்தாள்களில் சுற்றி குப்பையில் எறியும் போது அதை குப்பையில் இருந்து பிரித்தெடுக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ரத்தத்தினால் ஏற்படக்கூடிய தொற்றுக்கான `ஹெப்பட்டைட்டிஸ் பி', `ஹெப்பட்டைட்டிஸ் சி' போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உபயோகித்த நாப்கின்களை நன்கு அலசி பின்னர் பேப்பரில் சுற்றி வீசுவது நல்லது.

முடிந்த அளவுக்கு நாப்கின்களை `இன்சினிரேஷன்' என்று சொல்லக்கூடிய முறையில் எரித்து சாம்பலாக்கி அப்புறப்படுத்துவது சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும்.

Tags:    

Similar News