கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க சில வழிகள்!
- கர்ப்ப காலத்தில் செரிமானம் மெதுவாகக் கூடும்.
- செரிமானப் பிரச்சனை இருக்கும் பெண்கள் உணவை பிரித்து எடுத்துக்கொள்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பப்பை அழுத்தம், இரும்புச்சத்து போன்றவையே இதற்கு காரணம்.
கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் அதிகரிக்கத்தொடங்கும் இதனால் செரிமானம் மெதுவாகக் கூடும். இதனால் தான் தொடர்ந்து மலச்சிக்கல் உண்டாகிறது.
கர்ப்ப காலத்தில் செரிமானப் பிரச்சனை இருக்கும் பெண்கள் உணவை பிரித்து எடுத்துக்கொள்வது நல்லது. தினசரி 3 வேளை உணவை 6 வேளையாக பிரித்து எடுத்துக்கொள்ளலாம்.
அதிக அளவு உணவு ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும் போது வயிற்றுக்கு சுமை கூடும். இது செரிமானத்தை கடினமாக்கும். நீங்கள் எடுத்துக்கொள்ளும், உணவும் மலச்சிக்கலை உண்டாக்கும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மலச்சிக்கலை தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்களை இவை அளிக்கிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், கீரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், தானியங்கள் மற்றும் பழங்களில் ஆப்பிள், வாழைப்பழங்கள், அத்திப்பழம், ரோஸ்பெர்ரி போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் நாள் ஒன்றுக்கு 8 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் அது குடலை மென்மையாகவும், செரிமான பாதையை சீராக்கவும் செய்ய உதவும்.
கால்சியம் நிறைந்த உணவு, அதாவது பால் பொருட்களை அதிகம் சேர்க்கும் போது மலச்சிக்கல் உண்டாகலாம் எனவே அதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் இயன்றவரை மலச்சிக்கலுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதே நல்லது. அதேநேரம் அதிக மலச்சிக்கலை சந்திக்கும் போது மலம் இளகி வெளியேற மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள்.
இவை குடலை இயக்கி மலத்தை இளக்கி எளிதாக வெளியேற்ற உதவும். ஆனாலும் தொடர்ச்சியாக மருந்துகள் மூலமே மலத்தை வெளியேற்ற முயலக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப கால மலச்சிக்கலுக்கு தீர்வு மருந்துகள் தான் என்றில்லாமல் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை தவிர்க்க சிறந்த வழிகள் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை என்பதை மனதில் கொள்ளுங்கள்.