பெண்கள் உலகம்

கொஞ்சமா பேசுறவங்க... எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?

Published On 2024-10-17 09:25 GMT   |   Update On 2024-10-17 09:25 GMT
  • குறைவாகப் பேசுபவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள்.
  • வார்த்தைகள் அதிக சக்தி வாய்ந்தவை.

மனிதர்களின் மனநிலை மற்றும் குணாதிசியங்கள் ஒரே மாதிரியானது அல்ல. குறிப்பாக பேச்சு விஷயத்தில், சிலர் ரெயில் பயணத்தில் பேசி, பேசியே பிரெண்ட்ஸ் பிடித்து விடுவார்கள். சிலரோ பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் அலுவலகங்களில் பக்கத்து இருக்கையில் இருப்பவரோடு கூட அளவாகத் தான் பேசுவார்கள்.


அப்படி ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுபவர்களைப் பார்த்து "உம்மணா மூச்சி", "திமிர் பிடிச்சவர்", "பயந்தாங்கொள்ளி" என இஷ்டத்திற்கு பட்டப்பெயர் வைத்து அவமதிப்பார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், அளவாக பேசுபவர்கள் அதிக திறமைகளைத் தங்களுக்குள் ஒளித்து வைத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

குறைவாகப் பேசுபவர்கள் தங்களைப் பற்றிய நேர்மறையான அம்சங்களைப் பற்றி அதிகம் அறிந்திருப்பார்கள். இது அவர்களுக்கு முடிவுகளை சிறப்பாக எடுக்கவும், வேலைகளை சுலபமாக முடிக்கவும் உதவும்.

மற்றவர்களை விட குறைவாகப் பேசுபவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். ஏனெனில் குறைவாக பேசுவது தனிமை, கற்பனை மற்றும் படைப்பாற்றலை மேலும் வளர்க்க உதவுகிறது. இது அவர்களை மற்றவர்களை விட ஆக்கப்பூர்வமாக்குகிறது.

அதேபோல குறைவாக பேசுபவர்களின், வார்த்தைகள் அதிக சக்தி வாய்ந்தவை. பாயிண்ட் டு பாயிண்ட் அடித்து பேசுவார்கள்.


குறைவாகப் பேசுபவர்களை கவனித்தால், அவர்கள் அதிகமாகக் கேட்கிறார்கள். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால், அதை அவர்களிடம் சொல்லலாம். அவர்கள் அனைத்து விவரங்களையும் கூர்ந்து கவனிப்பதோடு, புரிந்தும் கொள்வார்கள். அதன் பின்னரே உங்களுக்கான தெளிவான பதிலைத் தருவார்கள்.

குறைவாக பேசுபவர்களுக்கு பொறுமை அதிகம். ஏதேனும் தவறுகள் நடப்பதற்கு முன்பே அதனைக் கண்டறிந்து சரி செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள். அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்களுடன் இணைந்திருப்பார்கள்.

Tags:    

Similar News